இங்கிலாந்து சென்ற இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று – ஷாக்கில் பிசிசிஐ!

 

இங்கிலாந்து சென்ற இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று – ஷாக்கில் பிசிசிஐ!

கொரோனா சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை புரட்டி போட்டிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளையும் மாற்றும் வகையில் கோரதாண்டவம் ஆடிவருகிறது. எப்போதுமே விளையாடும் வீரர்களில் யாரோ ஒருவர் தான் X Factor ஆக இருந்து ஆட்டத்தின் முடிவை மாற்றுவார். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த X Factor பொறுப்பை ஏற்றுயிருக்கிறது. இந்தியாவில் நடைபெற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் அதற்கு சிறந்த உதாரணம்.

இங்கிலாந்து சென்ற இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று – ஷாக்கில் பிசிசிஐ!

பயோ பபுள் போன்ற கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற அந்த தொடருக்குள்ளே கொரோனா நுழைந்து பிசிசிஐக்கு விளையாட்டு காட்டியது. இதனால் எந்த அணி கோப்பை வெல்லும் என்பதைக் கணிக்க முடியாத அளவிற்கு உள்ளது. இந்தியாவில் மாஸ் காட்டிய மும்பை, சிஎஸ்கே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜொலிக்குமா என்பது கேள்விக்குறி தான். இவ்வளவு ஏன் ஆர்சிபி கூட கோப்பையை வெல்லக் கூடும். அந்தளவிற்கு ஐபிஎல் தொடரில் முடிவற்ற கேள்வியைக் கொரோனா உருவாக்கியிருக்கிறது.

இங்கிலாந்து சென்ற இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று – ஷாக்கில் பிசிசிஐ!

இச்சூழலில் கொரோனா காரணமாக இரண்டு வெவ்வேறு அணிகளை உருவாக்கியது பிசிசிஐ. மூத்த வீரர்களைக் கொண்ட ஒரு அணி ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. சில மூத்த வீரர்களும் பல இளம் வீரர்களும் அடங்கிய மற்றொரு அணி இம்மாதம் இங்கிலாந்து செல்கிறது. விராட் கோலி தலைமையில் 23 வீரர்கள் செல்கின்றனர். தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடும் கட்டுப்பாடுகளுடன் இங்கிலாந்து சென்றனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இங்கிலாந்து சென்ற இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று – ஷாக்கில் பிசிசிஐ!

இங்கிலாந்திலும் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கியிருப்பதால் இந்தத் தொடரை நடத்துவதில் பல சவால்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எதிர்கொள்ளவிருக்கிறது. அதனால் வீரர்களுக்கு பல கட்ட சோதனைகள் செய்யப்படுகின்றன. அவ்வாறு செய்ததில் இரு இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இருவருக்கும் அறிகுறி இல்லாததால் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு நெகட்டிவ் என்று வந்துவிட்டது. மற்றொரு வீரருக்கு ஞாயிற்றுக்கிழமை டெஸ்ட் நடத்தப்பட்டு முடிவு தெரியவரும். இருவரும் நலமாக இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 10 நாட்களுக்கு முன்பே இருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.