இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

 

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் இரண்டாவது நாளான இன்று 99/3 என்ற கணக்கில் முதல் இன்னிங்சை மீண்டும் தொடர்ந்த இந்தியா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது, ரஹானே லீச்சின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பின் இந்திய அணியினர் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்து வெளியேறினர். அதுவரை சிறப்பாக ஆடி வந்த ரோஹித் சர்மா 66 ரன்களில் ஆட்டமிழந்தார். தனது அதிரடியால் ஆடுகளத்தை விட்டு வெளியே அடிக்கக்கூடிய ரிஷாப் பந்த், அடுத்த ஓவரில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சில் வீழ்ந்தார்.

Image

பந்துவீச்சில் மேலும் அசத்திய இங்கிலாந்து கேப்டன் ரூட் இந்திய அணி வீரர்களான வாஷிங்டன் சுந்தர் (0), ஆக்சர் படேல் (0), ஜஸ்பிரீத் பும்ரா (1) மற்றும் அஸ்வின் (17) உள்ளிட்ட 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தன் வாழ்நாளில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இறுதியில் இந்தியா 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 33 ரன்கள் பின்தங்கிய நிலையில்
2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, அக்ஸர் படேல் வீசிய முதல் ஓவரிலேயே கிராலி (0), பேர்ஸ்டோ (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் இங்கிலாந்து அணி 81 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அஸ்வின் தனது 77 வது டெஸ்டில் 400 வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

அதன்பின் 49 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை அடைந்தது , இதன் மூலம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணி டெஸ்ட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்த போட்டியில் வெற்றி அடைந்ததால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பில் நீடிக்கிறது. அடுத்து நடைபெறும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை வென்றாலோ அல்லது சமன் செய்தாலோ இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மாறாக தோல்வியடைந்தால் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 4ஆம் தேதி நடைபெறுகிறது.