”5 ஆண்டுகளில் உலக வாகன உற்பத்தி மையம் இந்தியா”! – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

 

”5 ஆண்டுகளில் உலக வாகன உற்பத்தி மையம் இந்தியா”! – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை சர்வதேச வாகன உற்பத்திக்கான மையமாக மாற்றுவதற்கு தேவையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

”5 ஆண்டுகளில் உலக வாகன உற்பத்தி மையம் இந்தியா”! – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

கர்நாடகாவின் எப்ஐசிசிஐ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த வர்சுவல் எலக்ட்ரிக் மொபிலிட்டி மாநாட்டில் பங்கேற்ற அவர் இது குறித்து பேசியதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை சர்வதேச வாகன உற்பத்திக்கான மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிலையை அடைய தேவையான அரசின் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், உலகின் மிகப்பெரிய மின்சார வாகனங்களுக்கான சந்தையாக இந்தியா உருவெடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார். மின்சார வாகனங்களின் தரத்தை நிலைநாட்டும் அதே சமயத்தில் அவற்றின் விலையை குறைக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்திய வாகன உற்பத்தி துறைக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

”5 ஆண்டுகளில் உலக வாகன உற்பத்தி மையம் இந்தியா”! – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

மேலும், உற்பத்தியை அதிகரிப்பதால் வளர்ச்சி பெற்று வரும் சந்தை மேலும் வளர்ச்சி பெற இந்திய வாகன உற்பத்தியாளர்கள் உதவிட முடியும் என கூறிய அவர், மின்சார வாகன உற்பத்தியாளர்கள் அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, ஏற்றுமதி வாய்ப்பையும் ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் காற்று மாசு ஆகிய இரண்டும் தான் இந்தியாவின் மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மின்சார வாகனப்போக்குவரத்து மூலமாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் சிறப்பான போக்குவரத்துக்கு உதவிட முடியும் என அவர் கூறியதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ். முத்துக்குமார்