உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டம்… சாதனை படைத்த இந்தியா!

 

உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டம்… சாதனை படைத்த இந்தியா!

ஜனவரி 16ஆம் தேதியன்று உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகின்றன. தடுப்பூசி கட்டாயமில்லை என்பதால் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் போட்டுக்கொள்கின்றனர். இரண்டாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. அதில் பிரதமர் மோடி போட்டுக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டம்… சாதனை படைத்த இந்தியா!

முதற்கட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தற்போது இரண்டாவது டோஸ் எடுத்துவருகின்றனர். இச்சூழலில், உலகிலேயே அதிக தடுப்பூசிகள் செலுத்திய மூன்றாவது நாடாக இந்தியா முன்னேறியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக அமெரிக்காவும் பிரிட்டனும் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் செலுத்திய நாடுகளாக இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, சுமார் 94 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டம்… சாதனை படைத்த இந்தியா!

உலகளவில் அதிக கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இருப்பினும், கடந்த ஒருவார காலமாக பாதிப்பு எண்ணிக்கையும் சரி, இறப்பு எண்ணிக்கையும் சரி குறைந்துகொண்டே வருகின்றன. ஒரு வாரத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.89 சதவீதத்திலிருந்து 1.69 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. உள்ளபடியே கொரோனாவிலிருந்து குணமடையும் விகிதம் அதிகரித்திருக்கிறது. 16 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இறப்பு கூட பதிவாகவில்லை.

உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டம்… சாதனை படைத்த இந்தியா!
உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டம்… சாதனை படைத்த இந்தியா!

நாட்டில் பதிவாகும் புதிய கொரோனா பாதிப்புகளில் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களிலிருந்து மட்டுமே 85.14 சதவீதம் பதிவாகின்றன. ஆரம்பக் காலங்களில் மிகக் குறைந்த பாதிப்புகள் பதிவாகிய கேரளாவில் தான் தற்போது தினமும் அதிக பாதிப்புகள் பதிவாகின்றன.