உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்களின் குறைந்து வருவதனால் அதனை உயிர் கொடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது டெஸ்ட் சாம்பியன்ஷிப், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த லீக் போட்டிகள் முடிந்து புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பைனலுக்கு முன்னேறியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தின் சவுதாம்ப்டனில் அடுத்த மாதம் ஜூன் 18ம் முதல் 22ம் தேதி வரை நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்ததும் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்பதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஆகிய இரண்டிற்கும் சேர்த்து இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா,சுப்மன் கில் ,மயாங்க் அகர்வால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடுவரிசையில் பேட்ஸ்மேன்களாக புஜாரா,கோலி,ரகானே,ஹனுமா விஹாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்,விருத்திமான் சகா மற்றும் கே எல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சாகா மற்றும் ராகுல் உடற்தகுதி அடிப்படையில் அணியில் சேர்க்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒருவேளை உடற்தகுதி எட்டும் பட்சத்தில் ராகுல் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.சுழல் மற்றும் ஆல்ரவுண்டர்களில் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் வேக பந்துவீச்சாளர்களில் ஜஸ்ப்ரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ்.

கடந்த டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த ப்ரித்வி சா,குல்தீப் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் அணியில் இடம்பெறவில்லை. அதேபோல் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் அணிச்சேர்க்கையில் பரிசீலிக்கப்பட வில்லை.