ஒரே நாளில் 3403 பேர் உயிரிழப்பு : லட்சத்திற்கும் கீழ் குறைந்த தொற்று பாதிப்பு!

 

ஒரே நாளில் 3403 பேர் உயிரிழப்பு : லட்சத்திற்கும் கீழ் குறைந்த தொற்று பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 91,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 92 ஆயிரமாக இருந்த நிலையில் நேற்று மீண்டும் 97 ஆயிரமாக உயர்ந்தது. தற்போது மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு லட்சத்திற்கும் கீழ் குறைந்த பாதிப்பு, நேற்றைய நிலவரத்தை காட்டிலும் 91 ஆயிரமாக குறைந்துள்ளது.

ஒரே நாளில் 3403 பேர் உயிரிழப்பு : லட்சத்திற்கும் கீழ் குறைந்த தொற்று பாதிப்பு!

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 91,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 2,92,74,823 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,77,90,073 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 1,34,580 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் 3403 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மட்டும் இந்தியாவில் சற்று கூடிக்கொண்டே செல்கிறது. இதன் மூலம் இதுவரை கொரோனாவில் நிகழ்ந்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,63,079 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 11,21,671 ஆகவும் , தடுப்பூசி எடுத்துக்கொண்டோர் எண்ணிக்கை 24,60,85,649 ஆகவும் இருக்கிறது.