ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,542 பேர் பலி : கடந்த 24 மணிநேரத்தில் 62,224 பேர் பாதிப்பு!

 

ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,542 பேர் பலி : கடந்த 24 மணிநேரத்தில் 62,224 பேர் பாதிப்பு!

இந்தியாவில் 9ஆவது நாளாக கொரோனா பாதிப்பு லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,542 பேர் பலி : கடந்த 24 மணிநேரத்தில் 62,224 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 62,224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 9ஆவது நாளாக கொரோனா பாதிப்பு லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதன் மூலம் கொரோனானால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,96,33,105 ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,65,432 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 1,07,628 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,542 பேர் பலி : கடந்த 24 மணிநேரத்தில் 62,224 பேர் பாதிப்பு!

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,82,80,472 லிருந்து 2,83,88,100 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.64%; உயிரிழப்பு விகிதம் 1.28% ஆக உள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 2,542 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 3,77,031லிருந்து 3,79,573ஆக உயர்ந்துள்ளது .இதுவரை 26,19,72,014 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 28,00,458 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.