இந்தியாவில் உச்சத்தில் கொரோனா : உருவாகிறது கொரோனா 3ஆம் அலை?!

 

இந்தியாவில் உச்சத்தில் கொரோனா : உருவாகிறது கொரோனா 3ஆம் அலை?!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,176 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 25,404 ஆக குறைந்திருந்த நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3,33,16,755 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உச்சத்தில் கொரோனா : உருவாகிறது கொரோனா 3ஆம் அலை?!

அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 284 பேர் பலியாகியுள்ளனர். நேற்று 339 பேர் ஒரேநாளில் இறந்த நிலையில் இன்று இறப்பு எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது. கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,43,497 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,51,087 ஆக உள்ளது.

இந்தியாவில் உச்சத்தில் கொரோனா : உருவாகிறது கொரோனா 3ஆம் அலை?!

கடந்த 24 மணிநேரத்தில் 38,012 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து 3,25,22,171 இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 61,15,690 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள நிலையில் இதுவரை 75,89,12,277 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என்றும் அடுத்த மாதம் மத்தியில் கொரோனா 3 ஆம் அலை உச்சத்தை அடையும் என்று சொல்லப்படும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.