அன்னிய நேரடி முதலீடு 2710 கோடி டாலராக 55 % உயர்வு

 

அன்னிய நேரடி முதலீடு 2710 கோடி டாலராக 55 % உயர்வு

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில், நாட்டில் அன்னிய நேரடி முதலீடு, 2710 கோடி டாலராக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ள விபரம் ; கடந்த 2019ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில், மொத்தம் 2335 கோடி டாலர் அளவுக்கு அன்னிய நேரடி முதலீடு கிடைத்து இருந்தது.
இந்த நிலையில், நடப்பாண்டின் இதே காலக்கட்டத்தில், 2710 கோடி டாலர் அளவுக்கு அன்னிய முதலீடுகளை இந்தியா பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் பார்க்கும் போது இது 16 சதவீத வளர்ச்சியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னிய நேரடி முதலீடு 2710 கோடி டாலராக 55 % உயர்வு

அதேப்போல, 2008 – 20114ம் ஆண்டுகளில் இந்தியாவிற்குள் மொத்தம் 23 ஆயிரத்து 137 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடுகளை இந்தியா பெற்று இருந்தது. இந்நிலையில், 2014- 2020ம் ஆண்டு காலக்கட்டத்தில் அது 35 ஆயிரத்து 829 கோடி டாலர் என்றளவில் 55 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

அன்னிய நேரடி முதலீடு 2710 கோடி டாலராக 55 % உயர்வு

பொருளாதார வளர்ச்சிக்கு அன்னிய நேரடி முதலீடு முக்கிய பங்காற்றுவதாகவும், அதனால், ஃஎப்டிஐ கொள்கைகளில் அன்னிய முதலீடு வராமல் தடுக்கும் முட்டுக்கட்டைகளை கண்டறிந்து, அவற்றை களைத்தெறிந்து, எளிமையாக முதலீடு கிடைக்க வழிவகை செய்யவும் அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் பலனாகவே கடந்த 6 ஆண்டுகளில், அன்னிய நேரடி முதலீடு பிரமாண்ட வளர்ச்சியை பெற்றுள்ளதை உணர்ந்துகொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • எஸ். முத்துக்குமார்