பொருளாதாரத்தை மீட்பதில் கவனம் செலுத்தும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும்… இந்தியா ரேட்டிங்ஸ்

 

பொருளாதாரத்தை மீட்பதில் கவனம் செலுத்தும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும்… இந்தியா ரேட்டிங்ஸ்

நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் பொருளாதாரத்தை மீட்பதில் கவனம் செலுத்தும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்க வேண்டும் என இந்தியா ரேட்டிங்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நாளை 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பல்வேறு சலுகைகள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று பல்வேறு துறையினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், மத்திய பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் கருத்து தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தை மீட்பதில் கவனம் செலுத்தும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும்… இந்தியா ரேட்டிங்ஸ்
மத்திய பட்ஜெட்

இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எதிர்வரும் மத்திய பட்ஜெட் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதையில் வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் நிதிப்பற்றாக்குறையை (அரசின் வருவாய்க்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம்) குறைப்பதில் கவனம் செலுத்தக்கூடாது. எதிர்வரும் 2021-22ம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 6.2 சதவீதமாக இருக்கும். இது நடப்பு நிதியாண்டின் 7 சதவீதத்தை காட்டிலும் குறைவாக இருக்கும்.

பொருளாதாரத்தை மீட்பதில் கவனம் செலுத்தும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும்… இந்தியா ரேட்டிங்ஸ்
நிர்மலா சீதாராமன்

மத்திய அரசு கடந்த ஆண்டு 2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் அல்லது ரூ.7.96 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிட்டு இருந்தது. ஆனால் இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு அதனை காட்டிலும் இரு மடங்கு அதிகமாக உள்ளது. அரசாங்கம் அதன் செலுத்த வேண்டிய தொகையை வழங்குவதோடு, ஒரு பகுதி செலவினத்தை 2021-22ம் நிதியாண்டுக்கு ஒத்திவைத்தால் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ரூ.13.44 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.