உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை நிறைவு செய்ய 43 லட்சம் நர்சுகள் தேவை.. இந்திய நர்சிங் கவுன்சில் தகவல்

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை நிறைவு செய்ய 43 லட்சம் நர்சுகள் தேவை.. இந்திய நர்சிங் கவுன்சில் தகவல்

2024ம் ஆண்டுக்குள் நம் நாட்டுக்கு 43 லட்சத்துக்கும் அதிகமான செவிலியர்கள் (நர்சுகள்) தேவை என்று இந்திய நர்சிங் கவுன்சில் தெரிவித்துள்ளது.

மருத்துவ துறையில் செவிலியர்கள் பணி மிகவும் இன்றியமையாதது. கொரோன தொற்றுநோய் காலத்தில் செவிலியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து நோயாளிகளுக்கு சேவையாற்றினர். நம் நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப செவிலியர்கள் இல்லை தகவல் தற்போது வெளியாகியுள்ளது. செவிலியர்கள் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை நம் நாட்டில் நிறைவேற்ற வேண்டுமானால், 2024ம் ஆண்டுக்குள் 43 லட்சத்துக்கும் அதிகமான செவிலியர்கள் தேவை.

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை நிறைவு செய்ய 43 லட்சம் நர்சுகள் தேவை.. இந்திய நர்சிங் கவுன்சில் தகவல்
உலக சுகாதார அமைப்ப

இது தொடர்பாக இந்திய நர்சிங் கவுன்சிலின் தலைவர் டி. திலீப் குமார் கூறியதாவது: ஒரு நாட்டில் சராசரியாக 1000 பேருக்கு 3 செவிலியர்கள் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் நம் நாட்டில் 1,000 பேருக்கு 1.7 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். இதன்படி பார்த்தால் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை நிறைவு செய்ய, 2024ம் ஆண்டுக்குள் நமக்கு 43 லட்சத்துக்கும் அதிகமான செவிலியர்கள் தேவை.

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை நிறைவு செய்ய 43 லட்சம் நர்சுகள் தேவை.. இந்திய நர்சிங் கவுன்சில் தகவல்
இந்திய நர்சிங் கவுன்சில்

ஆகையால், மத்திய அரசால் வலியுறுத்தப்பட்ட தேவையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டியது அவசியம். கல்வி, பயிற்சி மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றில் சிறந்த முதலீடுகளை செய்ய வேண்டும் மற்றும் முடிவெடுப்பதில் உள்ளடக்குதல் அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்திய செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் ராய் கே ஜார்ஜ் கூறுகையில், நம் நாட்டில் ஏற்கனவே செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஏனெனில் அவர்களில் (நர்சுகள்) பலர் நல்ல திருப்திகரமான நிலைக்காக வெளிநாடு செல்கின்றனர் என்று தெரிவித்தார்.