லாக்டவுனை நீக்கினால் ஜூலை மாத மத்தியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்ச கட்டத்தில் இருக்கும்… தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை

 

லாக்டவுனை நீக்கினால் ஜூலை மாத மத்தியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்ச கட்டத்தில் இருக்கும்… தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை

இந்தியாவில் இம்மாத இறுதியில் லாக்டவுனை நீக்கினால் ஜூலை மத்தியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்ச கட்டத்தில் இருக்கும் பிரபல சுகாதார மற்றும் தொற்றுநோயியல் நிபுணர் தெரிவித்துள்ளதாக தகவல்.

சீனாவில் உருவாகிய தொற்று நோய் கொரோனா வைரஸ் மெது மெதுவா மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. நம் நாட்டில் கடந்த ஜனவரி இறுதியில் கேரளாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், மார்ச் மத்தியில் இருந்து கொரோனா வைரஸ் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் 25 முதல் இம்மாதம் 31ம் தேதி வரை லாக்டவுனை நாடு முழுவதுமாக செயல்படுத்தியுள்ளது.

லாக்டவுனை நீக்கினால் ஜூலை மாத மத்தியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்ச கட்டத்தில் இருக்கும்… தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை

இந்த சூழ்நிலையில், மத்திய அரசு இந்த மாத இறுதியோடு முற்றிலுமாக லாக்டவுனை நீக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வரும் 25ம் தேதி முதல் உள்நாடு விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்க அனுமதி கொடுத்து விட்டது. மேலும் அடுத்த மாதம் முதல் ரயில் சேவைகளை கூடுதலாக இயக்க உள்ளது. இது நல்ல செய்திதான் என்றாலும், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதற்கு வழி செய்துவிடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நம் சந்தேகத்துக்கு வலு சேர்ப்பது போல் பிரபல சுகாதார மற்றும் தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் கருத்து கூறியுள்ளார். அவர் இது தொடர்பாக கூறுகையில், தற்போதைய லாக்டவுன் இம்மாத இறுதியில் நீக்கினால் ஜூலை மத்தியில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்ச கட்டத்தில் இருக்கும். இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் அதன் எழுச்சி சிறிது குறைவாக இருக்கும் என தெரிவித்தார். சர்வதேச அளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் நம் நாடு 11 இடத்தில் உள்ளது.