மொத்தமே இனி 5 அரசு வங்கிகள்தான்.. மற்ற வங்கிகளை தனியார்மயமாக்க அரசு திட்டம்..

மொத்தமே இனி 5 அரசு வங்கிகள்தான்.. மற்ற வங்கிகளை தனியார்மயமாக்க அரசு திட்டம்..

மத்திய அரசு பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைப்பு நடவடிக்கை வாயிலாக அரசு வங்கிகளின் எண்ணிக்கை 12ஆக குறைத்தது. தற்போது மீண்டும் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை 12லிருந்து 5ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாக அரசு மற்றும் வங்கி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மொத்தமே இனி 5 அரசு வங்கிகள்தான்.. மற்ற வங்கிகளை தனியார்மயமாக்க அரசு திட்டம்..

பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை 5ஆக குறைக்கும் திட்டத்தின் முதல் பகுதியாக, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் அண்டு சிந்து வங்கி ஆகியவற்றில் பெரும்பான்மையான பங்குகளை விற்பனை செய்வதாகும். இது அந்த அரசுக்கு சொந்தமான வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு வழி வகுக்கும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மொத்தமே இனி 5 அரசு வங்கிகள்தான்.. மற்ற வங்கிகளை தனியார்மயமாக்க அரசு திட்டம்..

மேலும், தற்போது அரசாங்கம் வகுத்து வரும் புதிய தனியார்மயமாக்கல் திட்டத்தில் இதற்கு திட்டம் தீட்டப்படும் என்றும், அது மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக முன்வைக்கப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார். அதேசமயம் இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் எந்த விதி கருத்தும் தெரிவிக்க மறுத்து விட்டது. பல அரசு குழுக்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் 5க்கு அதிகமான அரசு வங்கிகள் இருக்கக்கூடாது என பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.