பட்ஜெட்டில் கட்டுமானம் உள்பட பல்வேறு துறைகளில் அன்னிய முதலீட்டு விதிமுறைகளை தளர்த்த வாய்ப்பு

 

பட்ஜெட்டில் கட்டுமானம் உள்பட பல்வேறு துறைகளில் அன்னிய முதலீட்டு விதிமுறைகளை தளர்த்த வாய்ப்பு

மத்திய பட்ஜெட்டில் கட்டுமானம், அனிமேஷன் உள்பட பல்வேறு துறைகளில் அன்னிய முதலீட்டு விதிமுறைகளை தளர்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க தேவையான மூலதனத்தை ஈர்க்க கட்டுமானம் முதல் அனிமேஷன் வரையிலான துறைகளில் அன்னிய முதலீடுகளுக்கு விதிமுறைகளை தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. டவுன்ஷிப்கள், சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுமானத்தில் பொறுப்பு பார்ட்னர்ஷிப்களை அனுமதிக்கும் திட்டம் மத்திய அரசு வசம் உள்ளதாக தகவல்.

பட்ஜெட்டில் கட்டுமானம் உள்பட பல்வேறு துறைகளில் அன்னிய முதலீட்டு விதிமுறைகளை தளர்த்த வாய்ப்பு
மத்திய பட்ஜெட்

அதேவேளையில் அனிமேஷன், விசுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் ஆகிய துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் மத்திய அரசு வசம் உள்ளது. அநேகமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பான அறிவிப்புகளை மத்திய பட்ஜெட்டில் வெளியிட வாய்ப்புள்ளது. இதுதவிர ஒழுங்குப்படுத்தப்பட்ட நிதி சேவைகள் வழங்குபவர்களுக்கு எதிரான அனைத்து நுகர்வோர் புகார்களையும் ஆராய ஒரு நிதி தீர்வு முகமையை அரசு அமைக்க வாய்ப்புள்ளது.

பட்ஜெட்டில் கட்டுமானம் உள்பட பல்வேறு துறைகளில் அன்னிய முதலீட்டு விதிமுறைகளை தளர்த்த வாய்ப்பு
அன்னிய முதலீடு

ஹெல்த்கேர் துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதவதற்கு மத்திய பட்ஜெட்டில் சுகாதார செலவினங்களை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று சுகாதார சேவை வழங்குபவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த 3 ஆண்டுகளில் சுகாதாரத்துக்கான பொது செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். இவற்றில் பெரும்பாலானவை நமது உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், நவீனப்படுத்துவதற்கும் முதலீடு செய்யப்பட வேண்டும் ஹெல்த்கேர் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.