இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்- இங்கிலாந்து வீரர்கள் இந்தியா வருகை !

 

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்- இங்கிலாந்து வீரர்கள் இந்தியா வருகை !

இந்தியா-இங்கிலாந்து இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், டெஸ்ட் அணியில் விளையாட உள்ள இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பி உள்ளது. அதேபோல இந்திய அணியுடன் மோத உள்ள இங்கிலாந்து அணியினர் தற்போது இலங்கை சுற்றுப்பயணத்தில் உள்ளனர். அங்கிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வர உள்ளனர்.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்- இங்கிலாந்து வீரர்கள் இந்தியா வருகை !

இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரண்டு போட்டிகள் குஜராத் மாநிலத்தில் இரண்டு போட்டிகள் தமிழகத்திலும் நடைபெற உள்ளன . இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள், டி20 என நீண்ட தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது