” விமான பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்வு” !

 

” விமான பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்வு” !

நவம்பரில் தினசரி உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரித்துள்ளது. இது தொற்று பரவலுக்கு முந்தைய கால அளவில் பாதியை அடைந்துள்ளதாக விமானப்போக்குவரத்து அமைச்சக செயலாளர் பிரதீப் சிங் கரோலா தெரிவித்துள்ளார்.

” விமான பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்வு” !

உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் விமானிகளுக்கான பயிற்சி மைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார். அப்போது இது குறித்து அவர் மேலும் பேசியதாவது ; கொரோனா தொற்று பரவல் காரணமாக உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட 2 மாத தடை விலக்கப்பட்டு, மே மாதத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது.

அப்போது, முதல் நாளில் நாடெங்கிலும் விமானங்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாக இருந்தது. இது நவம்பரில் நாள் ஒன்றுக்கு 2 லட்சமாக தற்போது அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

” விமான பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்வு” !

மேலும், கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு வரை சராசரியாக உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை தினமும் 3.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை இருந்ததாக குறிப்பிட்ட அவர், இந்த எண்ணிக்கையில் பாதி அளவை சில மாதங்களிலேயே அடைந்துவிட்டதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

” விமான பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்வு” !

அதேப்போல புக்கிங் 100 சதவீதம் வரை நடைபெறுவதாகவும் குறிப்பிட்ட அவர், நியூ நார்மலுக்கு ஏற்ப விரைவாக தங்களை மாற்றிக்கொண்டு பழைய நிலைக்கு பயணிகளை வர செய்தமைக்காக விமான நிறுவனங்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

  • எஸ். முத்துக்குமார்