“விழ விழ நாங்கள் எழுவோம்… முதுகெலும்பு சிதைந்தும் தொடுவோம் சிகரம்” – ஆஸி.க்கு ஆப்படித்த ‘காயம்பட்ட சிங்க’ இந்தியா!

“விழ விழ நாங்கள் எழுவோம்… முதுகெலும்பு சிதைந்தும் தொடுவோம் சிகரம்” – ஆஸி.க்கு ஆப்படித்த ‘காயம்பட்ட சிங்க’ இந்தியா!

கிரிக்கெட்டில் பழம் தின்று கொட்டை போட்டவர்களால் கூட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முடிவுகள் என்னவாக இருக்கும் என கணிக்க முடியவில்லை. இதில் சாமான்ய கிரிக்கெட் ரசிகர்கள்லாம் எம்மாத்திரம்.

இந்தியா வீழ்ந்துவிடும் என்று எண்ணி ரசிகர்கள் துவண்டாலும் வீரர்கள் சளைக்காமல் திமிறி எழுந்து வரலாற்றை மாற்றி எழுதியுள்ளனர். கிரிக்கெட் அசுரர்களான ஆஸ்ரேலியர்களுக்கு தண்ணி காட்டிவிட்டனர். அவர்களின் முன்னாள் வீரர்களைப் புலம்பவிட்டனர்.

“விழ விழ நாங்கள் எழுவோம்… முதுகெலும்பு சிதைந்தும் தொடுவோம் சிகரம்” – ஆஸி.க்கு ஆப்படித்த ‘காயம்பட்ட சிங்க’ இந்தியா!

பல்வேறு ட்விஸ்டுகள் நிறைந்த முழுமையான அதிரடி ஆக்‌ஷன் படமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது பார்டர்-கவாஸ்கர் தொடர். முதல் போட்டியில் இந்தியா மிக மோசமாக தோற்றதும் 0-4 கணக்கில் தொடரின் முடிவு இருக்கும் என ஆஸ்திரேலியா ஜாம்பவான்களும் அந்நாட்டு ஊடகங்களும் எக்காளமிட்டன.

நிலைமை இப்படியிருக்க மிக முக்கியமான பில்லர் கோலி இந்தியா திரும்ப, மெயின் பவுலர் ஷமி காயத்தால் விலக என இக்கட்டான சூழலில் தவித்தது இந்தியா. இரண்டாவது டெஸ்டில் இந்தியா கண்டிப்பாக பெரிய அடி வாங்கும் என கணக்கு போட்டுக்கொண்டிருக்க பும்ரா தலைமையிலான பவுலிங் அட்டாக் ஆஸ்திரேலியாவை சிதைத்து சின்னாபின்னாமாக்கியது.

பேட்ஸ்மேன்களும் தங்களுடைய பணியை செவ்வன செய்யவே அதிரிபுதிரியாக வரலாற்று வெற்றியைச் சுவைத்தது ரஹானே அண்ட் கோ. முடிஞ்சது சொன்ன வாய்கள் அனைத்திற்கும் தாழ்ப்பாள் போட்டது. செண்டர்பிரஸ் மட்டுமல்ல இந்திய அணியும் வாய்க்கு போடும் பூட்டு!

“விழ விழ நாங்கள் எழுவோம்… முதுகெலும்பு சிதைந்தும் தொடுவோம் சிகரம்” – ஆஸி.க்கு ஆப்படித்த ‘காயம்பட்ட சிங்க’ இந்தியா!

மூன்றாவது போட்டியில் தான் இந்தியாவிற்கு மெயின் சோதனையே காத்துக் கொண்டிருந்தது. போட்டிக்கு முன்னும் பின்னும் ஏராளமான வீரர்கள் காயமடைந்தார்கள். மற்றொரு சீனியர் பவுலரான உமேஷ் யாதவும் காயத்தால் விலக பவுலிங் அட்டாக் வலுவிழந்து போனது. சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது தானே இந்திய அணியின் பலம்.

இரண்டாவது போட்டியில் மாற்றான் பிரதர்ஸ் ஸ்மித், லபுசானேவை கட்டம் கட்டி தூக்கியது போல் மூன்றாவது போட்டியில் தூக்க முடியவில்லை. காரணம் இந்தியாவின் பிளானை தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு ஆட்டத்தை மாற்றிக்கொண்டனர். விளைவு ஆஸ்திரேலியாவுக்கு நல்ல அடித்தளம் அமைந்தது. ஏதோ ஜடேஜா கைகள் செய்த அற்புதத்தால் 400 ரன்களை அடிக்க விடாமல் தடுக்க முடிந்தது.

“விழ விழ நாங்கள் எழுவோம்… முதுகெலும்பு சிதைந்தும் தொடுவோம் சிகரம்” – ஆஸி.க்கு ஆப்படித்த ‘காயம்பட்ட சிங்க’ இந்தியா!

சரி பேட்டிங்கில் இந்தியா லைனை பிடித்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. அரைசதம் அடித்த புஜாரா, கில் தவிர்த்து யாரும் சோபிக்கவில்லை. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய ஆஸ்திரேலியா அதிரடியாக விளையாடி 407 ரன்கள் என்ற கடினமான ஸ்கோரை நிர்ணயித்தது. முதல் டெஸ்ட் போட்டியைப் போல் இந்தியாவின் கதை முடிந்துவிட்டது உள்ளூர் ரசிகர்களே சோகத்தில் ஆழ்ந்தனர்.

அப்போது தான் யாரும் எதிர்பாராத விதமாக இந்தியாவின் X factor என்று வர்ணிக்கப்படும் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா பந்துவீச்சை கொளுத்திவிட்டார். அதற்குப் பின் நடந்ததெல்லாம் வரலாற்றி பொறிக்கப்பட வேண்டிய சம்பவங்கள்.

காயத்தோடு ஹனுமா விஹாரியும் அஸ்வினும் வெறித்தனமான பந்துவீச்சை திறமையாக எதிர்கொண்டு போட்டியை டிரா செய்தனர். அந்த இன்னிங்ஸை அவர்கள் மறந்தாலும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் அப்படியொரு இன்னிங்ஸ். தொடர் 1-1 என்ற சமநிலையில் இருந்தது.

“விழ விழ நாங்கள் எழுவோம்… முதுகெலும்பு சிதைந்தும் தொடுவோம் சிகரம்” – ஆஸி.க்கு ஆப்படித்த ‘காயம்பட்ட சிங்க’ இந்தியா!

பார்டர் டிராபியை இந்தியா தக்கவைக்குமா அல்லது ஆஸ்திரேலியா தட்டிப் பறிக்குமா அல்லது இந்தியாவே மீண்டும் வெல்லுமா என்ற பரபரப்பான கிளைமேக்ஸுக்கு பிரிஸ்பேனில் இரு அணி வீரர்களும் தயாராகியிருந்தனர். இம்முறை மெயின் பவுலர் பும்ரா, அனுபவ வீரர்கள் அஸ்வின், ஜடேஜா என எவரும் இல்லாமல் அந்தரத்தில் இந்தியா தொங்கி கொண்டிருந்தது. மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கியிருந்தது இந்தியா.

தற்போது அறிமுகமான சிராஜ் தான் அணியின் பவுலிங் அட்டாக்கை தலைமை தாங்கவிருக்கிறார். ஊறுகாய் அளவுக்கு கூட சீனியர் பவுலர் யாரும் இல்லை. இந்தியா டிரா செய்தாலே பெரிய விஷயம் என்றே பார்க்கப்பட்டது. இப்படியொரு அணியிடம் தோற்றால் ஆஸ்திரேலியாவுக்கு அவமானம் என பாண்டிங் தூபம் போட்டார்.

“விழ விழ நாங்கள் எழுவோம்… முதுகெலும்பு சிதைந்தும் தொடுவோம் சிகரம்” – ஆஸி.க்கு ஆப்படித்த ‘காயம்பட்ட சிங்க’ இந்தியா!

அது முதல் இன்னிங்ஸில் பற்றி எரிந்துவிட்டது. முதல் இன்னிங்ஸில் இம்முறை லபுசானே சதமடித்து அணியை வலுவான இடத்திற்கு நகர்த்திச் சென்றார். இந்தியாவின் வெற்றிக்கான ஒளி கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லவே இல்லை.

கடந்த முறை டிரா செய்த அஸ்வினும் விஹாரியும் கூட இல்லை. வழக்கம் போல இந்தியாவின் டாப் ஆர்டர் ஆட்டம் காண, மிடில் ஆர்டரும் சரிந்தது. மேட்ச் ஆஸ்திரேலியாவிடம் கை நழுவிச் சென்றுவிட்டது என்று எண்ணிய போது தான் அறிமிக வீரரான வாசிங்டன் சுந்தரும் டெஸ்டிற்கு புதுசான தாக்கூரும் ட்விஸ்ட் வைத்திருந்தார்கள். இருவரும் அநாயசமாக ஆஸ்திரேலிய பவுலிங் அட்டாக்கை அடித்து நொறுக்கினர். No Look சிக்சர் அடித்து வெறுப்பேற்றினார் சுந்தர்.

“விழ விழ நாங்கள் எழுவோம்… முதுகெலும்பு சிதைந்தும் தொடுவோம் சிகரம்” – ஆஸி.க்கு ஆப்படித்த ‘காயம்பட்ட சிங்க’ இந்தியா!

இருவரும் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை லிப்டில் ஏற்றிவிட்டனர். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற வாசகம் பிக்பாஸ் மூலம் பிரபலமானாலும், அது முற்றிலும் பொருந்தி போனது என்னவோ பார்டர்-கவாஸ்கர் தொடருக்கு தான். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு ஜோடி பெரும் தலைவலியைக் கொடுத்தது தான் உச்சபட்ச கொடூரம். பாவம் ஆஸ்திரேலியா. பாவம்பா அவன விட்ருபா என்று இந்திய ரசிகள் கூறும் அளவுக்கு அடி வெளுத்துவிட்டனர்.

இரண்டாம் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்பதே ஆஸ்திரேலியாவின் பிளான். ஆனால் அதை தகர்த்தெறிந்தார் சிராஜ். ஒரு வழியாக உருட்டி 294 ரன்களை அடித்து, முந்தைய இன்னிங்ஸில் பெற்ற 34 ரன்களுடன் 328 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆட்டத்தின் கடைசி செசனில் மழை குறுக்கிட்டதால் இந்தியாவால் அதிக ஓவர்கள் ஆட முடியவில்லை.

பிட்ச்சில் வெடிப்பு ஏற்பட்டு பந்து எக்குத்தப்பாக திரும்புவதால் ஆஸ்திரேலிய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், அதைச் செய்தது என்னவோ புஜாராவும் கில்லும் தான். புஜாரா நங்கூரமாக நிற்க கில் அரைசதம் கடந்த பின் ஒன்டே மோடுக்கு அப்கிரேட் ஆகி பொளந்துவிட்டார்.

“விழ விழ நாங்கள் எழுவோம்… முதுகெலும்பு சிதைந்தும் தொடுவோம் சிகரம்” – ஆஸி.க்கு ஆப்படித்த ‘காயம்பட்ட சிங்க’ இந்தியா!

“நான் ஜெயிக்கனும்னாலும் டிரா பண்ணனும்னாலும் நான் தான் முடிவு பண்ணுவேன்… நீ ஜெயிக்கிறத கனவுல கூட நினச்சி பாக்க கூடாது” என்ற மெசெஜை மிக அழகாக இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு பாஸ் செய்தது.

அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்து கில் சென்றாலும், புஜாரா பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அடுத்து வந்தார் X factor சூறாவளி பண்ட் வழக்கம் போல தன்னுடைய ஆட்டத்தை ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

“விழ விழ நாங்கள் எழுவோம்… முதுகெலும்பு சிதைந்தும் தொடுவோம் சிகரம்” – ஆஸி.க்கு ஆப்படித்த ‘காயம்பட்ட சிங்க’ இந்தியா!

“காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு அதோட கர்ஜனைய விட பயங்கரமா இருக்கும்” என்பது போல வரலாற்றிலேயே மிக மிக மோசமான ஸ்கோர் (36/10) அடித்து காயம் பட்ட அணி உயிர்த்தெழுந்து தொடரைக் கைப்பற்றி ஆஸ்திரேலியர்களை அவர்களின் மண்ணிலையே மண்டியிட வைத்திருக்கிறது இந்தியாவின் இளம்படை! வாழ்த்துகள்!