இந்தியாவில் 36 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 971 பேர் பலி!

 

இந்தியாவில் 36 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 971 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது நாடு முழுவதும் அன்லாக் தொடங்கி விட்டது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தான் பாதிப்பு அதிகமாக இருப்பதால், அந்தந்த மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். அதன் படி, கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநிலங்கள் ஊரடங்கை நீடித்தும், கட்டுப்பாடுகளை கடுமையாக்கியும் வருகின்றன. ஆனால், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 36 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 971 பேர் பலி!

இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 36,21,245 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஒரே நாளில் 78,512 பேருக்கு கொரோனா உறுதியானதோடு 971 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64,469 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, கொரோனாவில் இருந்து 27.74 லட்சம் பேர் குணமடைந்து விட்டதாகவும் 7.61 லட்சம் பேருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் 36 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 971 பேர் பலி!

மேலும் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.79% ஆகவும், குணமடைந்தோர் விகிதம் 76.61% ஆகவும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.