இந்தியா கொரோனா பாதிப்பு: முழு விவரம் உள்ளே!

 

இந்தியா கொரோனா பாதிப்பு: முழு விவரம் உள்ளே!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. பல மாதங்களாக மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போட்ட இந்த கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வரப் போகிறது. வைரஸுக்கு எதிரான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாராகி இருக்கும் நிலையில், அவை அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வரும் 16ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படவிருக்கிறது.

இந்தியா கொரோனா பாதிப்பு: முழு விவரம் உள்ளே!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,946 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,12,093 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் 198 பேர் உயிரிழந்ததால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,51,727 ஆக அதிகரித்துள்ளதாகவும் தற்போது 2,13,603 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் குறைந்திருக்கும் நிலையில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.