உச்சத்தில் கொரோனா பாதிப்பு.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

 

உச்சத்தில் கொரோனா பாதிப்பு.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ளது. கொரோனா இரண்டாம் கட்ட அலை பரவத் தொடங்கியிருப்பதால் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக கையாள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்திருப்பதால், பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டது.

உச்சத்தில் கொரோனா பாதிப்பு.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

அதன் படி, அந்தந்த மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளன. இருப்பினும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் 62,258 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 291 பேர் உயிரிழந்ததாகவும் 30,386 பேர் குணமடைந்து இருப்பதாகவும் 4,52,647 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

உச்சத்தில் கொரோனா பாதிப்பு.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மேலும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,19,08,910 ஆக உயர்ந்துள்ளதாகவும் இதுவரை 1,12,95,023 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதாகவும் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,61,240 ஆக உயர்ந்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 40 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.