அசுர வேகத்தில் பரவும் கொரோனா… மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

 

அசுர வேகத்தில் பரவும் கொரோனா… மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடெங்கிலும் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. இரண்டாம் கட்ட அலை பரவத் தொடங்கியிருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவரவில்லை என்றால் லாக்டவுன் அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அசுர வேகத்தில் பரவும் கொரோனா… மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டிருந்தது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 251 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 26,490 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும் 3,95,192 பேருக்கு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

அசுர வேகத்தில் பரவும் கொரோனா… மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இம்மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 12 முதல் 16 ஆயிரத்துக்குள்ளாகவே இருந்தது. கடந்த வாரம் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரமாக உயர்ந்ததைத் தொடர்ந்து இன்று 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதே நிலை நீட்டித்தால் பழைய படி நாளொன்றுக்கு 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு பரவும் என பதைபதைக்கும் தகவல்கள் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.