‘ஒரே நாளில் 18,222 பேருக்கு கொரோனா’ : அதிகரிக்கும் புதிய கொரோனா பாதிப்பால் அச்சம்!

 

‘ஒரே நாளில் 18,222 பேருக்கு கொரோனா’ : அதிகரிக்கும் புதிய கொரோனா பாதிப்பால் அச்சம்!

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,04,31,639 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் 6 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகி இருந்தது. அவர்கள் மூலமாக, 70% அதிவேகமாக பரவக்கூடிய இந்த புதிய வகை கொரோனா வைரஸ், தற்போது 81 பேரை பாதித்துள்ளது. பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்காத வண்ணம் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. இதனிடையே, முன்னதாக பரவி வந்த கொரோனா வைரஸும் வட மாநிலங்களில் அதிகமாக பரவி வருகிறது.

‘ஒரே நாளில் 18,222 பேருக்கு கொரோனா’ : அதிகரிக்கும் புதிய கொரோனா பாதிப்பால் அச்சம்!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 18,222 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,04,31,639 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் 228 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,00,56,651 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை கொரோனாவில் இருந்து 1,00,56,651 பேர் குணமடைந்திருப்பதால் 2,24,190 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.