நாடு முழுவதும் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : முக்கிய தகவல் இதோ!

 

நாடு முழுவதும் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : முக்கிய தகவல் இதோ!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,064 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : முக்கிய தகவல் இதோ!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கடந்த 16ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. தடுப்பூசி போடுவதில் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வரும் நிலையில், ஒரு நாள் இடைவெளி விட்டு தடுப்பூசி போடுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இதனிடையே, கொரோனா வைரஸ் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படுவதால் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டுகின்றர். இரண்டு தடுப்பூசிகளுமே மிக பாதுகாப்பானது தான் என மத்திய அரசு உறுதிப்பட தெரிவித்தும், மக்கள் மத்தியில் நம்பிக்கை வரவில்லை. இதன் காரணமாக, முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

நாடு முழுவதும் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : முக்கிய தகவல் இதோ!

இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் 10,064 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாகவும், 137 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 17,411 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து இதுவரை 1,02,28,753 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 2,00,528 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.