இந்தியாவில் ஒரே நாளில் 86,432 பேருக்கு கொரோனா; 1,089 பேர் மரணம்!

 

இந்தியாவில் ஒரே நாளில் 86,432 பேருக்கு கொரோனா; 1,089 பேர் மரணம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களும் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இருப்பினும் பாதிப்புகள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. ஆனால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளித்து, அன்லாக் செயல்பட்டு வருகிறது. விரைவில் இந்தியா முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 86,432 பேருக்கு கொரோனா; 1,089 பேர் மரணம்!

அதில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,23,179 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஒரே நாளில் 86,432 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும் 1,089 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 69,561 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 31.07 லட்சமானதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவின் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.74% ஆகவும், குணமடைந்தோர் விகிதம் 77.15% ஆக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.