இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.98% ஆக குறைவு; ஒரே நாளில் 942 பேர் பலி!

 

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.98% ஆக குறைவு; ஒரே நாளில் 942 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநில முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தால் இந்தியா விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவித்தார். இதனிடையே ரஷ்யா கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறப்படும் நிலையில், அதன் நம்பகத்தன்மை குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.98% ஆக குறைவு; ஒரே நாளில் 942 பேர் பலி!

இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23,96,637 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை 47,033 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 16.95 லட்சம் பேர் குணமடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 66,999 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் 56,383 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாகவும் தற்போது 6.53 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 942 பேர் பலியாகி இருப்பதாகவும் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.98% ஆக குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.