ஒரே நாளில் கொரோனாவிலிருந்து 1 லட்சம் பேர் குணமடைந்தனர் – சுகாதாரத்துறை அமைச்சகம்

 

ஒரே நாளில் கொரோனாவிலிருந்து 1 லட்சம் பேர் குணமடைந்தனர் – சுகாதாரத்துறை அமைச்சகம்

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. அதே போல, கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இதனால் விரைவில் இந்தியா இயல்பு நிலைக்கு திரும்பும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஒரே நாளில் கொரோனாவிலிருந்து 1 லட்சம் பேர் குணமடைந்தனர் – சுகாதாரத்துறை அமைச்சகம்

அதில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு 55,62,663 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஓரே நாளில் 75,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும் இதுவரை கொரோனாவால் 88,935 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒரே நாளில்கொரோனாவால் 1,053 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து 44.97 லட்சம் பேர் குணமடைந்து விட்டதாகவும் ஒரே நாளில் 1,01,468 பேர் குணமடைந்ததால் தற்போது 9.75 லட்சம் பேருக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.