இந்தியாவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு பாதிப்பு; 1,201 பேர் மரணம்!

 

இந்தியாவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு பாதிப்பு; 1,201 பேர் மரணம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருவதால் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அண்மையில், கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தவர்களுக்கும் கொரோனா அறிகுறி இருப்பதால் அவர்களை கண்டறிந்து மறுபரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதே போல, இதற்கென எல்லா மாவட்டங்களிலும் தனிக்குழு அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதன் பேரில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு பாதிப்பு; 1,201 பேர் மரணம்!

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 46,59,984 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 1,201 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 77,472 கொரோனாவில் இருந்து 36.24 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனவால் உயிரிழந்தவர்கள் விகிதம் 1.66%ஆகவும் குணமடைந்தோர் விகிதம் 77.77% ஆக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.