இந்தியாவில் கொரோனாவுக்கு 1.16 லட்சம் பேர் பலி!

 

இந்தியாவில் கொரோனாவுக்கு 1.16 லட்சம் பேர் பலி!

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 1.16 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வரும் நிலையில், கொரோனா இரண்டாம் கட்ட அலையில் இருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல, தற்போது பண்டிகை காலங்கள் நெருங்குவதால் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு 1.16 லட்சம் பேர் பலி!

அதில், மொத்த கொரோனா பாதிப்பு 77,06,946 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 702 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,16,616 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 68.75 லட்சம் பேர் மீண்டதால் தற்போது 7.15 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.51% ஆகவும், குணமடைந்தோர் விகிதம் 89.20% ஆகவும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.