இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை… நாட்டாமையாக ஆசைப்படும் அமெரிக்கா

 

இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை… நாட்டாமையாக ஆசைப்படும் அமெரிக்கா

ஒவ்வொரு நாட்டிலும் அதன் அண்டை நாடுகளோடு எல்லை பிரச்சினைகள் இருப்பது வழக்கம்தான். கடல் எல்லையாக இருக்கும் நாடுகளில் அந்தச் சிக்கல் பெரும்பாலும் இருப்பதில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான், சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் நமக்கும் இடையே எல்லை பிரச்சினைகள் அவ்வப்போது நடக்கும். பெரும்பாலும் பாகிஸ்தானோடுதான்.

இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை… நாட்டாமையாக ஆசைப்படும் அமெரிக்கா

ஜவகர்லால் நேரு இந்திய பிரதமராக இருந்த 1962-ம் ஆண்டில் சீனாவுடன் இந்தியாவுக்கு எல்லை பிரச்சினை தொடர்பாக சண்டை நடைபெற்றது. அது குறித்து இப்போதும் பல விவாதங்கள் நடைபெறுகின்றன.

அதன்பின் பெரியளவில் சீனாவுடன் சிக்கல் ஏதுமில்லை. ஆனால், கடந்த சில மாதங்களாக சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் குறிப்பாக கிழக்கு லடாக் பகுதியில் அத்துமீறுவதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இரு நாடுகளின் கருத்து வேறுவேறாகவே இருக்கிறது. இந்தச் சிக்கலால், சீனாவில் டிக்டாக், கேம்ஸ்கேனர் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட செயலிகளை இந்தியா தடை செய்தது. சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தியா தம் முடிவில் பின்வாங்க வில்லை.

இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை… நாட்டாமையாக ஆசைப்படும் அமெரிக்கா

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசுகையில், ’இந்தியாவுக்கும் சீனாவுக்குமான சிக்கல் வருத்தம் அளிக்கிறது. இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் அத்துமீறலைக் கண்டிக்காது இருதரப்புக்கும் நடுவராக இருக்க விரும்புவதுபோல ட்ரம்பின் பேச்சு அமைந்திருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் சீனாவைப் பற்றி காத்திரமாகப் பேச மழுப்பிய ட்ரம்ப், மற்ற விஷயங்களில் சீனாவைக் கடுமையாகத் தாக்கி பேசிவருகிறார். எதிர் தரப்பில் போட்டியிடும் ஜோபிடன் சீனாவின் ஆதரவாளர் என்று சொல்லிதான் ட்ரம்ப் வாக்குகளே கேட்கிறார்.