ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

 

ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா உலகை வாட்டி எடுத்துவருகிறது. நாள்தோறும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் அபாயத்தை உலகம் சந்தித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் இரண்டாம் அலை வாட்டி வதைத்துவரும் நிலையில், கொரோனா தடுப்பூசி தீவிரமாக போடப்பட்டுவருகிறது.

கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ரெம்டிசிவிர், டோசிலிசம்ப் ஆகிய மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்புக்குள்ளாகி அதிக காய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் மருந்துகளை ஐ.சி.எம்.ஆர் வழங்க பரிந்துரைத்தது. இதனிடையே கொரோனாவுக்கு மருந்துகள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகின.

ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. வரும் நாட்களில் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரெம்டிசிவிர் மருந்து பதுக்கப்படுவதையும் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்கவும் மருந்து ஆய்வாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ரெம்டிசிவிர் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், தம்மிடம் உள்ள இருப்பு விவரங்களை இணையத்தில் வெளியிடவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.