உலகளவில் இரண்டாம் இடத்தை நெருங்கும் இந்தியா #CoronaUpdates

 

உலகளவில் இரண்டாம் இடத்தை நெருங்கும் இந்தியா #CoronaUpdates

ஆகஸ்ட் மாதத்தில் கடைசி நாளான இன்றைய காலை நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 53 லட்சத்து  86 ஆயிரத்து 928 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 20 நாட்களுக்குள் 53 லட்சம் அதிகரித்து விட்டது.   

உலகளவில் இரண்டாம் இடத்தை நெருங்கும் இந்தியா #CoronaUpdates

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 77 லட்சத்து 08 ஆயிரத்து 719 நபர்கள்.   

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 50 ஆயிரத்து 592 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 68,27,617 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர்  லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

உலகளவில் இரண்டாம் இடத்தை நெருங்கும் இந்தியா #CoronaUpdates

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 61,73,236 பேரும், பிரேசில் நாட்டில்  38,62,311 பேரும் இந்தியாவில் 36,21,245 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

உலகளவில் இரண்டாம் இடத்தை நெருங்கும் இந்தியா #CoronaUpdates

 அமெரிக்காவில் 33,981 பேரும், பிரேசிலில் 15,346 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 79,457 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.

புதிய நோயாளிகளின் எண்ணிக்கை பிரேசிலில் குறைந்துகொண்டே வருகிறது. இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதே நிலை நீடித்தால், இன்னும் ஒரு வாரத்தில், அதிக பாதிப்புள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா உலகளவில் இரண்டாம் இடத்திற்குச் சென்று விடும் அபாயம் இருக்கிறது.