• April
    26
    Friday

Main Area


கேரளா

கேரளாவுக்கு யெல்லோ அலர்ட்; மலைப்பகுதிகளில் யாருக்கும் அனுமதி இல்லை?!..

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தகவலை தொடர்ந்து கேரளாவின் பேரிடர் மேலாண்மை குழு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்துள்ளது. 


உயிரிழந்து கரை ஒதுங்கிய மீன்கள்

பச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்!

கடந்த ஐந்து, ஆறு நாட்களாக ஆற்றின் நிறம் பச்சையாக மாறியுள்ளது. மீன்கள் உயிரிழந்து கரை ஒதுங்குகிறது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம்


கோப்புப்படம்

நெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கு தொடர ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசினார். அதன் மூலம் தலைமை நீதிபதியை பதவி விலக வைப்பதே அவரது நோக்கம். எனவே, அதனை நான் மறுத்து விட்டேன்


கோப்புப்படம்

அரசின் அக்கறையின்மை; தெலங்கானாவில் அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை!

மாணவர்கள், பெற்றோர்கள் தயக்கமில்லாமல் அரசின் இலவச சேவையை அழைக்கலாம். உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள் என 24 மணி நேரமும் ஆலோசனை வழங்க காத்திருக்கின்றனர்

டிரஸ்ஸை அவுத்துட்டு நில்லுங்க...இல்லன்னா வெளியே போங்க’...நடிகர் ஜாமினில் வெளியே வந்தார்!

ஹைதராபாத்: மாணவிகளை மேலாடையை கழற்றுமாறு கூறியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைதான நடிகர் ஜாமினில் வெளிவந்துள்ளார்.

ஹைதராபாத்தில் பிரபல நாடக கலைஞர் வினய் வர்மா என்பவர், ஒன்றிரண்டு தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார். சுற்றத்தார் என்ற பெயரில் நாடக பள்ளி ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார். சம்பவ தினத்தன்று, கதவு மற்றும் ஜன்னல்களை பூட்டி விட்டு அனைத்து மாணவ/மாணவிகளும் தங்களது மேலாடைகளை கழற்றி விட்டு வரிசையாக நிற்கும்படி வினய் வர்மா கூறியுள்ளார்.

hyderabad acting

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி ஒருவர், மேலாடையை கழற்ற முடியாது என தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வினய் வர்மா, மேலாடையை கற்ற வேண்டும் இல்லையெனில் வெளியே போ என அந்த மாணவியிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்து வெளியேறிய அந்த மாணவி, பெண்களின் பாதுகாப்புக்காக தெலங்கானா காவல்துறை ஒரு பிரிவாக செயல்பட்டு வரும் 'ஷீ டீம்' என்ற தனிப்பிரிவில் இது தொடர்பான புகாரை அளித்துள்ளார். அவர்கள் அளித்த ஆலோசனையின் படி, நாராயனகுடா காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்தார். பல்வேறு அலைக்கழிப்புகளுக்கு பின்னர் மாணவியின் புகார் பெறப்பட்டு, வினய் வர்மா கைது செய்யப்பட்டார்.

vinay varma

இதனைத்தொடர்ந்து, தனக்கு ஜாமின் கோரி வினய் வர்மா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, மேலாடையை கழற்றுமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை. தியானம், யோகா பயிற்சிகள் போலவே இதுவும் நடிப்பில் மாணவர்கள் மெருகேற்றப்படுவதற்காக பயன்படுத்தப்படுவது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, அவருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, சம்பவம் குறித்து வினய் வர்மா ஏற்கனவே கூறும்போது, புகார் அளித்த மாணவிக்கு இங்கு வருவது பிடிக்கவில்லை. அவரது தந்தையின் விருப்பத்திற்காகவே இங்கு சேர்ந்த அவர் முதல் நாளில் இருந்தே எதாவது புகார் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். மேலாடையை தான் கழற்ற கூறினேன். நிர்வாணமாக இருக்க சொல்லவில்லை. மேலாடையை கழற்றுவது படிப்பின் ஒரு பகுதி. அதன் மூலம் உடலை எப்படி கருவியாக பயன்படுத்துவது என்பது கற்றுத் தரப்படும் என விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

முன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கில் மனைவி அதிரடி கைது: 90 நிமிடங்களில் தடயங்களை அழித்தது அம்பலம்!

smprabu Wed, 04/24/2019 - 15:17
vinay varma Hyderabad, acting school acting tutor theatre artist புகார் அளித்த மாணவி க்ரைம் இந்தியா

English Title

Theatre artist vinay varma got bail who arrested after Acting student complaint sexual harassment

News Order

0

Ticker

0 வரவர மாமியார் கழுத போல தேய்ஞ்சாலாம்; இது என்னடா காங்கிரஸ் கட்சிக்கு வந்த சோதனை!

நம்மூரில் ஒரு பழமொழி கூறுவார்கள்..வரவர மாமியார் கழுத போல ஆனாளாம் என்று. தன்னுடைய மாமியாரை கொடுமைப்படுத்திய பெண் ஒருவர், அவரை வீட்டை விட்டு துரத்த தேவதையின் வரம் பெற்று இளமை பொங்கும் அழகுடனும், ஏராளமான தங்கத்துடனும் அவர் மீண்டும் வீடு வந்து சேருகிறார். இதனால், தன்னுடைய அம்மாவையும் அப்படி ஆக்கும் பொருட்டு அதேபோன்று அப்பெண் அனுப்ப, தேவதையிடம் வீடு போய் சேரும் முன் கழுதையாக மாறி விடுவாய் என்ற சாபம் வாங்கி வருகிறார் அவர். இதனை கண்ட ஊர் மக்கள் அப்பெண்ணின் கணவரிடம் "வர வர மாமியார் கழுத போல ஆனாளாம்" என கூறுவது போன்றது அந்த பழமொழி.

rahul gandhi

இந்த பழமொழி எதற்கு பொருந்துதோ இல்லையோ, தற்போது காங்கிரஸ் கட்சிக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது. சுதந்திரத்துக்கு பின்னர், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ், பல்வேறு மாநிலங்களில் தனது கொடியை பறக்கவிட்டது. பெரும்பாலான மாநிலங்களில் அந்த கட்சியின் ஆட்சி நடைபெற்றது. அப்போதெல்லாம் சொற்ப இடங்களில் போட்டியிட்டு, மிகவும் குறைவான எம்.பி.,-க்களையே பாஜக தன் வசம் வைத்திருந்தது.

ஆனால், கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில், காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படு தோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பாஜக மட்டும் 282 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

Vajpayee

ஏற்கனவே வாஜ்பாய் தலைமையில் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்திருந்தாலும், கடந்த தேர்தலில் அக்கட்சி பெற்றது தான் மிகப்பெரிய வெற்றி. அதில், பாஜக கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதம் 38.5. பாஜக மட்டும் பெற்ற வாக்கு சதவீதம் 31.0. அப்படி பார்த்தால், சுதந்திரத்துக்கு பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் குறைவான வாக்கு சதவீதம் பெற்ற கட்சி, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது அதுவே முதல் முறை.

ஆனால், கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 464 தொகுதிகளிலும், பாஜக 428 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதேபோல், 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 440 தொகுதியிலும், பாஜக 433 தொகுதியிலும் போட்டியிட்டது. 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 414 தொகுதியிலும், பாஜக 364 தொகுதியிலும் போட்டியிட்டது.

modi

இந்நிலையில், ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நடப்பு மக்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாஜக-வும், விட்ட கோட்டையை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக மெகா கூட்டணியை இரு கட்சிகளும் அமைத்துள்ளன. இருப்பினும், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 423 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் இரு தொகுதிகளுக்கு மட்டும் தான் அக்கட்சி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். ஆனால், பாஜக-வோ இதுவரை 437 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. அந்த இரு தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்தாலும், அக்கட்சியால் பாஜக-வின் எண்ணிக்கையை தாண்ட முடியாது.

bjp congress

பாஜக-வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோள் மட்டுமே என்பதால், கூட்டணி கட்சிகளுடன் பல்வேறு சமரசங்களை காங்கிரஸ் செய்து கொண்டாலும், பாஜக-வை விட இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைவான வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளது அக்கட்சியின் சோதனை காலமாகவே பார்க்கப்படுகிறது. இது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மைல் கல் ஆகும்.

இதையும் வாசிங்க

மாட்டு கோமியம் புற்றுநோயை குணப்படுத்தும்: புது கண்டுபிடிப்பை வெளியிட்ட பா.ஜ.க வேட்பாளர்

smprabu Wed, 04/24/2019 - 14:00
Loksabha Elections bjp congress கோப்புப்படம் தேர்தல் களம் தேர்தல் செய்திகள் இந்தியா

English Title

Loksabha elections 2019; Congress is contesting low seat when compared to BJP

News Order

0

Ticker

0 
கைதான  அபூர்வா

முன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கில் மனைவி அதிரடி கைது: 90 நிமிடங்களில் தடயங்களை அழித்தது அம்பலம்!

என்.டி.திவாரி மகன் கொல்லப்பட்ட வழக்கில் அவர் மனைவி அபூர்வா அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 


மோடி-அக்‌ஷ்ய் குமார்

சந்நியாசி ஆகவே விரும்பினேன்’-மோடி...’மே 23க்கு அப்புறம் கண்டிப்பா ஆயிடலாம் சுவாமி’-நெட்டிசன்ஸ்...

நான் அரசியலுக்கு வரவோ பிரதமராகவோ ஆசைப்பட்டதில்லை. சன்னியாசி ஆகவேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது’ என்று பிரதமர் மோடி அளித்த பேட்டிக்கு ’மே 23க்கு அப்புறம் உங்க விருப்பம் கண்டி...


கோப்புப்படம்

ஓலா பைக் டாக்சியில் பயணித்த இளைஞர் பலி; கேள்விக்குறியாகும் பயணிகள் பாதுகாப்பு!

இந்நிறுவனங்களில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள பெரும்பாலான ஓட்டுநர்களால், தங்களது பயணிகளுக்கு ஹெல்மெட் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.


ஜக்பிர் சிங் ராணா

மூன்று உயிர்களை காப்பாற்ற போய் தன்னுயிரை விட்ட ரயில்வே போலீஸ்: அலட்சியத்தால் நடந்த கோர சம்பவம்!

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 பேரின்  உயிரைக் காப்பாற்றிய ரயில்வே போலீஸ் ஒருவர்  ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
உச்சநீதிமன்றம் - ராகுல்

மோடியை திருடன் என கூறிய வழக்கு; உச்சநீதிமன்றத்துக்கு ராகுல் பதில்?!..

அமேதியில் பேசிய ராகுல், உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். காவலாளியே திருடன் (Chowkidar chor hai) என மொத்த நாடும் சொல்லுகிறது என மோடியை குறிப்பிட்டார்.


டிக் டோக்

டிக் டோக் மீதான தடை தானாகவே நீங்கிவிடும்: உயர் நீதிமன்ற கிளையை எச்சரித்த உச்சநீதிமன்றம்!

டிக் டோக் செயலிக்கு உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோப்புப்படம்

ஓயோவில் ஹோட்டல் புக் செய்தவருக்கு நேர்ந்த கொடுமை!

இந்தியாவிலேயே மிகப் பெரிய ஆன்லைன் ஹோட்டல் சேவை தரும் நிறுவனமாக மதிப்பிடப்பட்டிருக்கும் ஓயோ நிறுவனம், நடுத்தர வசதி கொண்ட ஹோட்டல்களை ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து தருகிறது


ஆறுதல் கூறிய குரங்கு

இறந்தவர்கள் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறும் பாசக்கார குரங்கு-வைரல் வீடியோ!

குரங்குகள் என்றதும், அதனுடைய சேட்டைகள், நாம் வைத்திருக்கும் தின்பண்டங்களை அபகரிப்பது, நம்மை போலவே நடித்து காட்டுவது உள்ளிட்ட பல சம்பவங்கள் சட்டென நமது நினைவில் வரும்


பிரியங்கா காந்தி (கோப்புப்படம்)

நான் இந்திரா காந்தியா? - பிரியங்கா காந்தி விளக்கம்!

உணர்ச்சிவசப்படாத பிரியங்கா காந்தியின் மனநிலை, அரசியல் மற்றும் செயல்படும் பாணி ஆகியவை இந்திரா காந்தியிடம் இருந்து மாறுபட்டிருக்கும் என கூறப்பட்டாலும், இந்திராவை போன்று எளிதாக மக்களு...


  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: என்ன சொல்கிறார் ரஞ்சன் கோகாய்?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளது நீதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ராக்கி தத்தா

தந்தைக்காக தன் உயிரை பணயம் வைத்த இளம்பெண்: கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

தன் தந்தையின் உயிரை காப்பாற்ற மகள் ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்திருக்கும் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

வணிகர்களுக்கு பிணையில்லா கடன்; பிரதமர் மோடி உறுதி!

புதுதில்லி: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வணிகர்களுக்கு பிணையில்லாமல் ரூ.50 லட்சம் வரை கடன் அளிக்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.

மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. எஞ்சியுள்ள தொகுதிகளில் அரசியல் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரசாரத்தின் போது ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தும், வாக்குறுதிகளை அள்ளி வீசியும் பிரசாராம் மேற்கொண்டு வருகின்றனர்.

modi

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற வர்த்தகர்கள் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் வணிகர்களுக்கு பிணையில்லாமல் ரூ.50 லட்சம் வரை கடன் அளிக்கப்படும் எனவும், தேசிய வர்த்தகர் நல வாரியம் அமைக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

மேலும் பேசிய அவர், முந்தைய காங்கிரஸ் அரசு வணிகர்களை ஒதுக்கி வைத்தது. பணவீக்கத்திற்கு வணிகர்களே காரணம் என குற்றம் சாட்டிய காங்கிரஸ், வர்த்தகத்தை பாதிக்கும் பல சட்டங்களை உருவாக்கியது என குற்றம் சாட்டினார்.

கடந்த தேர்தலின் போது, வணிகத்தை பாதிக்கும் சட்டங்கள் நீக்கப்படுமென வாக்குறுதி அளித்ததை சுட்டிக் காட்டிய மோடி, கடந்த 5 ஆண்டுகளில் தேவையற்ற 1500 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாவும், வியாபாரிகளுக்கு கடன் பெறுவதற்கான வசதிகள் எளிமையாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

modi

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும். ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடுத் திட்டம், கடன் அட்டை திட்டம் உள்ளிட்டவைகள் அறிமுகப்படுதப்படும். ஜி.எஸ்.டி வரி விதிப்பு மேலும் எளிமையாக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் பிரதமர் மோடி அப்போது அளித்தார்.

வியாபாரிகள் இந்நாட்டில் முதுகெலும்பு. மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக உலக அளவில் வர்த்தகத்திற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி உள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் வாசிங்க

என்.டி.திவாரியின் மகன் மூச்சு திணறலால் உயிரிழந்தார்; பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்!

smprabu Sat, 04/20/2019 - 08:31
PM Modi Business Man loans traders பிரதமர் மோடி தேர்தல் களம் தேர்தல் செய்திகள் இந்தியா

English Title

Collateral-free loan up to Rs 50 lakhs if NDA comes to power: PM Modi

News Order

0

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.