அடேங்கப்பா இப்படிலாமா ஓட்டு கேட்பீங்க? ஸ்டார் தொகுதியில் கலக்கும் சுயேட்சை வேட்பாளர்

 

அடேங்கப்பா இப்படிலாமா ஓட்டு  கேட்பீங்க? ஸ்டார் தொகுதியில் கலக்கும்  சுயேட்சை வேட்பாளர்

சட்டமன்ற தேர்தலுக்கு சரியாக இன்னும் ஒருவாரமே உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன் தமிழக அரசியல் களத்தில் பல வேடிக்கையான நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. பரம விரோதிகளாக இருந்த கட்சிகள் பரஸ்பரம் செய்து கொள்வது, ஒரே கூட்டணியில் இருந்தவர்கள் பிரிந்து சென்று சகட்டு ,மேனிக்கு திட்டிக்கொள்வது எல்லாம் அரசியலில் வழக்கமான ஒன்று தான்.அதேபோல் வாக்கு சேகரிப்பிலும் பல காமெடி கட்சிகள் அரங்கேறுகின்றன. வேட்பாளர் துணி துவைத்து கொடுப்பது, டீக்கடையில் டீ போடுவது, தோசை மாஸ்டராக மாறுவது பல விநோதங்கள் நடக்கின்றன.

அடேங்கப்பா இப்படிலாமா ஓட்டு  கேட்பீங்க? ஸ்டார் தொகுதியில் கலக்கும்  சுயேட்சை வேட்பாளர்

ஓட்டுக்காக இப்படியெல்லாம் கூடவா செய்வீங்க என்று கேட்ககூடிய அளவுக்கு பல நிகழ்வுகள் நடந்து வருகிறது.அந்த வகையில் சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சுகந்தன் உருண்டு புரண்டு வாக்கு சேகரித்து வருகிறார். ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை சின்னத்தில் வாக்கு அளியுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அத்துடன் தனது தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர் தான் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் மக்களுக்கு தேவையான உதவிகளை முடிந்தவரை செய்வேன் என்றார்.

அடேங்கப்பா இப்படிலாமா ஓட்டு  கேட்பீங்க? ஸ்டார் தொகுதியில் கலக்கும்  சுயேட்சை வேட்பாளர்

சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் 7வது முறையாக களம் காண்கிறார். ராயபுரம் தொகுதியின் செல்லப்பிள்ளையாக இருக்கும் ஜெயக்குமாரை எதிர்த்து ஐட்ரீம் மூர்த்தியை திமுக களமிறக்கியுள்ளது. இவர்களின் தீவிர பிரச்சாரங்களுக்கும் , பணம் புழக்கத்திற்கும் மத்தியில் சுயேட்சை வேட்பாளர் சுகந்தன் நம்பிக்கையுடன் வாக்கு சேகரித்து வருகிறார்.