கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி, ஆட்சியரிடம் மனு!

 

கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி, ஆட்சியரிடம் மனு!

கோவை

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம், சுயேட்சை வேட்பாளர் மனு அளித்தார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவின் வானதி சீனிவாசன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரசின் மயூரா ஜெயக்குமார் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே கமல்ஹசான் மற்றும் வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியில் வானதி சீனிவாசன், 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹசானை வீழ்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி, சுயேட்சை வேட்பாளர் ராஜிவ் காந்தி என்பவர், கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தார்.

கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி, ஆட்சியரிடம் மனு!

அந்த மனுவில், வானதி சீனிவாசனின் வெற்றியில் ஆட்சேபம் இருப்பதாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்ப ரீதியாக மாற்றி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ராஜிவ் காந்தி தெரிவித்து உள்ளார்.

எனவே, கோவை தெற்கு தொகுதியில் வாக்குகள் பதிவான 100 வாக்கு எந்திரங்களில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தி, தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளார். இதனால், கோவை தெற்கு தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.