கை குலுக்க மறந்த கமல்… வாழ்த்து கடிதத்தை திருப்பி அனுப்பிய, சுயேட்சை வேட்பாளர்…

 

கை குலுக்க மறந்த கமல்… வாழ்த்து கடிதத்தை திருப்பி அனுப்பிய, சுயேட்சை வேட்பாளர்…

கோவை

கோவையில் தன்னுடன் கமல்ஹாசன் கை குலுக்காததால் வருத்தமடைந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர், கமல் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை திருப்பி அனுப்பி உள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த சில நாட்களுக்கு தன்னுடன் போட்டியிடும் சக வேட்பாளராகிய ராகுல்காந்தி என்பவருக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார். அதில், அனைவரும் ஒன்றாக கைகோர்ப்போம் என்று வாழ்த்து கூறி இருந்தார்.

நேற்று வாக்குப்பதிவின் போது, கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை பார்வையிட கமல்ஹாசன் சென்றிருந்தார். அப்போது, அங்கிருந்த சுயேட்சை வேட்பாளர் ராகுல்காந்தி, கமல்ஹசானுக்கு அருகே சென்று, கை குலுக்க முயன்றார். ஆனால், பாதுகாவலர்கள் கமலிடம் கைகுலுக்க அனுமதி தர வில்லை என கூறப்படுகிறது.

கை குலுக்க மறந்த கமல்… வாழ்த்து கடிதத்தை திருப்பி அனுப்பிய, சுயேட்சை வேட்பாளர்…

இதனால் மனவருந்திய ராகுல்காந்தி, கமல்ஹாசன் எழுதிய வாழ்த்துக் கடிதத்தை அவருக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடிதத்தில் மட்டும் கை கோர்ப்போம் என கூறிவிட்டு, நேரில் பார்த்தபோது மரியாதைக்காக கூட கைகுலுக்காமல் புறக்கணித்தது, தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே, தாங்கள் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை, தங்களுக்கே திருப்பி அனுப்புவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டு, அதனுடன் கமலின் வாழ்த்து கடிதத்தை திருப்பி அனுப்பி உள்ளார்.