இங்கிலாந்தை மீண்டும் புரட்டிப்போட்ட அக்சர் புயல்… இந்தியாவுக்கு வெறும் 49 ரன்கள் இலக்கு!

 

இங்கிலாந்தை மீண்டும் புரட்டிப்போட்ட அக்சர் புயல்… இந்தியாவுக்கு வெறும் 49 ரன்கள் இலக்கு!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. ஸ்பின்னர்களுக்கான விக்கெட் வேட்டைக்களமாகவே புதிய அகமதாபாத் ஆடுகளம் மாறி நிற்கிறது. முழு சந்திரமுகியாகவே மாறியிருக்கிறது. இரு அணி சுழல் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே உவப்பான ஆடுகளமாக இருக்கிறது. இரு அணிகளிலும் ஸ்பின்னர்கள் மட்டுமே 27 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்கள் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளனர்.

Image

முதல் நாளிலேயே 112 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டது. அடுத்த நாளான இன்று 145 ரன்களுக்கு இந்தியா சுருண்டுவிட்டது. இரு அணிகளின் தொடக்க வீரர்களான கிராலி, ரோஹித் சர்மா ஆகிய இருவர் மட்டுமே அரைசதத்தை எடுத்திருக்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்கு ரன் எடுப்பதே அதிசயமாக இருந்தது.

Image

இரண்டாவது இன்னிங்ஸில் 33 ரன்களுடன் இந்தியா முன்னிலையில் இருந்தது. இச்சூழலில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 81 ரன்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் இழந்து வெற்றிவாய்ப்பை இழந்தது. இதன்மூலம் 49 ரன்கள் இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது ஆடிவருகிறது. தற்போதைய நிலவரப்படி 5 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி ஆடிவருகிறது.