மாநகர பகுதிகளில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை – மக்கள் அவதி

 

மாநகர பகுதிகளில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை – மக்கள் அவதி

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு
மாநகரில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக அவற்றுக்கு, மாநகராட்சி சார்பில் கருத்தடை செய்யப்பட்டு வந்தது.

மாநகர பகுதிகளில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை – மக்கள் அவதி

கொரோனா பரவல் காரணமாக தற்போது இந்த பணி தற்காலிகாமாக நிறுத்தப்பட்டது. இதனால், தெருநாய்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து, நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. இவை சாலைகளில் நடந்து செல்பவர்களையும், இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்திச்சென்று தாக்கி வருகின்றன. மேலும், இறைச்சி கடைகளின் முன்பு கூட்டமாக நின்று, அங்கு வரும் வாடிக்கையாளர்களையும் கடித்து வருகின்றன. இதனால், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் 15 முதல் 20 பேர் வரை நாய் கடிக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கடும் அவதிக்குள்ளாகி உள்ள நகர் பகுதி மக்கள் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து பேசிய ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், தற்போது அகில இந்திய பிராணிகள் நலவாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் சார்பில், அதன் நிர்வாகிகளிடம் தகவல் கேட்டு வருவதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாநகர பகுதிகளில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை – மக்கள் அவதி