இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : முக்கிய தகவல் இதோ!

 

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : முக்கிய தகவல் இதோ!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13,193 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் சூழலில், கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தொடங்கியதால் விரைவில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. வட மாநிலங்களிலேயே அதிகளவு பாதிப்புகள் பதிவாகி இருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : முக்கிய தகவல் இதோ!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 13,193 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,09,63,394 ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாழியில் 97 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 10,896 பேர் டிஸ்சார்ஜ் ஆகி இருப்பதாகவும் 1,39,542 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : முக்கிய தகவல் இதோ!

மேலும், இதுவரை 1,01,88,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,56,111 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று உயிரிழப்புகள் குறைவாக இருந்தாலும் பாதிப்பு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.