இன்று 5030 பேர் – கர்நாடாகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

 

இன்று 5030 பேர் – கர்நாடாகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

கொரோனா நோய்த் தொற்றல் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவை வாட்டி எடுத்துவருகிறது. அம்மாத இறுதி முதல் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. இதனால் நோய்த் தொற்றுவது கட்டுப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எண்ணிக்கை குறைந்த பாடில்லை.

கர்நாடகா மாநிலத்தில் தொடக்கத்தில் நோய்த் தொற்று அதிகரித்தாலும் நோயாளிகளின் பயணித்த வழிகளைக் கண்டறிந்து புதிய பாதிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியது அம்மாநில அரசு. இதனால் பெங்களூரு மாநகரத்தில் கட்டுக்குள் இருந்தது கொரோனா பாதிப்பு.

இன்று 5030 பேர் – கர்நாடாகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

ஆனால் கடந்த சில நாட்களாக கர்நாடாகவில் மீண்டும் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. இன்றைக்கு வெளிவந்திருக்கும் அறிவிப்பின் படி, கர்நாடகாவில் இன்று மட்டும் 5,030 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை யாருமே எதிர்பார்க்காத ஒன்று.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் இன்று புதிய நோயாளிகளாக 2,207 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் எனும் பார்க்கையில் இன்று 97 பேர். இதன் மூலம் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்க 1,616 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்று 5030 பேர் – கர்நாடாகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புஇந்திய அளவில் பார்க்கையில் கொரோனா நோய்த் தொற்று அதிகளவில் பரவி முதல் இடத்தில் மகாராஷ்டிராவும் இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும் உள்ளன. மூன்றாம் இடத்தில் டெல்லியும் நான்காம் இடத்தில் கர்நாடகாவும் உள்ளன.