“வீட்டு மானியம் ரூ. 70,000 ஆக உயர்வு; ரூ.1,791 கோடியில் தாலிக்கு தங்கம்” : இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள்!

 

“வீட்டு மானியம் ரூ. 70,000 ஆக உயர்வு; ரூ.1,791 கோடியில் தாலிக்கு தங்கம்” : இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள்!

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று இடைக்கால பட்ஜெட்டை இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறைக்கு ரூ.11,982 கோடி ஒதுக்கீடு, சுகாதாரத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 19,420 கோடி ஒதுக்கீடு, பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ. 5ஆயிரம் ஒதுக்கீடு போன்ற முக்கிய அறிவிப்புக்களை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்த நிலையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

“வீட்டு மானியம் ரூ. 70,000 ஆக உயர்வு; ரூ.1,791 கோடியில் தாலிக்கு தங்கம்” : இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள்!

*3,016 கோடி செலவில் 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் அளிக்கப்படும்.

*ரூ.144.33 கோடி நிதியில் 2,749 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன

*பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேற்கூரை அமைப்பதற்கான மானியம் ரூ.70 ஆயிரமாக உயர்வு

*மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1374 கோடி ஒதுக்கீடு

“வீட்டு மானியம் ரூ. 70,000 ஆக உயர்வு; ரூ.1,791 கோடியில் தாலிக்கு தங்கம்” : இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள்!

*கல்லணை கால்வாய் புனரமைப்பு, நவீனப்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்

*சரபங்கா நீரேற்று திட்டம், அத்திகடவு-அவினாசி திட்டம் விரைவில் நிறைவுபெறும்

*திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

*திருமண உதவித் திட்டத்தில் ரூ.4,371 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது

*தலைவாசலில் அமைக்கப்படும் சர்வதேச தரத்திலான கால்நடை பூங்காவுக்கு கூடுதலாக ரூ.634.87 கோடி நிதி ஒதுக்கீடு

“வீட்டு மானியம் ரூ. 70,000 ஆக உயர்வு; ரூ.1,791 கோடியில் தாலிக்கு தங்கம்” : இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள்!

*இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,000 ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்வு

*தமிழகத்தில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது

*மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது

*அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டு தொகை 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு; குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு 10லட்சம் காப்பீட்டு தொகை

*இளைஞர்கள் நலனுக்கு ரூ.229.37 கோடி ஒதுக்கீடு

*தமிழக காவல்துறையை நவீனமயமாக்க பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு