காவலர்களுக்கு ஊக்கத்தொகை : ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

 

காவலர்களுக்கு ஊக்கத்தொகை : ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

கொரோனா காலத்தில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றி வரும் முன்கள பணியாளர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஊக்கத்தொகை அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம், பத்திரிக்கையாளர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் என அடுத்தடுத்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.

காவலர்களுக்கு ஊக்கத்தொகை : ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

அந்த வகையில், முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது காவல்துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருவதால் அவர்களை அங்கீகரிக்கும் விதமாகவும் ஊக்குவிக்கும் விதமாகவும் இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரை ஒரு லட்சத்து 17 ஆயிரம் காவலர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், காவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக தமிழக அரசு ரூ.58.59 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். இதன் மூலமாக 1.17 லட்சம் காவலர்கள் பயனடைவார்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.