’பிச்சை எடுத்தாலும் கொடுத்தாலும் தண்டனை’ எந்த நகரத்தில் தெரியுமா?

 

’பிச்சை எடுத்தாலும் கொடுத்தாலும் தண்டனை’ எந்த நகரத்தில் தெரியுமா?

எந்த நகரத்திலும் டிராஃபிக் சிக்னலில் பிச்சை எடுப்பவர்களைப் பார்த்து விட முடியும். கைக்குழந்தையைத் தூக்கி வந்து பசிக்குது எனப் பிச்சை கேட்கும்போது பலரால் ஒதுங்கி போ என்று சொல்லமுடியாது. இன்னும் சிலருக்கு கை அல்லது கால் போன்ற உறுப்புகள் இருக்காது. அதைக் காட்டி உழைக்க முடியாத இயலாமையைச் சொல்லி பிச்சை கேட்பார்கள். சில வயதான முதியவர்கள் இருப்பார்கள். இவர்களைப் பார்க்கையில் பலரும் மனமிறங்கி உதவி செய்வது வழக்கமே.

தற்போது இலங்கையின் கொழும்பு நகரில் பிச்சை எடுக்கவும் பிச்சை கொடுக்கவும் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வரை செல்லக்கூடும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது.

’பிச்சை எடுத்தாலும் கொடுத்தாலும் தண்டனை’ எந்த நகரத்தில் தெரியுமா?

இலங்கை, கொழும்பு காவல்துறை சார்பாகக் கூறப்பட்டிருப்பதில், ‘சிக்னல் அருகே பிச்சை எடுப்பவர்கள் நிஜமான பிச்சைக்காரர்கள் அல்ல. வேறு எவராலோ அனுப்பப்பட்டிருக்கு வலுகட்டாயமாக பிச்சை எடுக்க வைக்கப்பட்டவர்கள். இவர்களால் போக்குவரத்து பிரச்னை ஏற்படுகிறது. இப்படி, வாகனத்தில் வருபவர்களை நிறுத்தி பணமோ, பொருளோ கேட்பவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும் என்று அழுத்தமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

’பிச்சை எடுத்தாலும் கொடுத்தாலும் தண்டனை’ எந்த நகரத்தில் தெரியுமா?

கொழும்பு காவல் துறை சொல்வதில் உண்மை இருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் சிறுவர்களை, பெண்களை பிச்சை எடுக்க வைப்பதற்கு பின்னால், பெரிய கும்பலே இருப்பதாகப் பலரும் தெரிவித்துள்ளனர். இயக்குநர் பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தில் பிச்சைக்காரர்களை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்சிப் படுத்தியிருப்பார்கள்.