அடுத்த 6 மாதத்துக்குள் 3 லட்சம் பேருக்கு அரசு வேலை… எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த யோகி ஆதித்யநாத்..

 

அடுத்த 6 மாதத்துக்குள் 3 லட்சம் பேருக்கு அரசு வேலை… எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த யோகி ஆதித்யநாத்..

அடுத்த 6 மாதத்துக்குள் அரசு துறைகளில் 3 லட்சம் பேரை நியமனம் செய்யும் நடவடிக்கையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முடுக்கிவிட்டுள்ளார்.

லாக்டவுன் காரணமாக வெளிமாநிலங்களில் வேலைபார்த்து வந்த உத்தர பிரதேச தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு திரும்பினர். லாக்டவுன் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியதால் பலரும் வேலைவாய்ப்பை இழந்தனர். இதனால் மாநிலத்தில் வேலையின்மை அதிகரித்தது. இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலத்தில் வேலையின்மை அதிகரித்துள்ளதே சுட்டிக்காட்டி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

அடுத்த 6 மாதத்துக்குள் 3 லட்சம் பேருக்கு அரசு வேலை… எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த யோகி ஆதித்யநாத்..
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு தனது செயலின் வாயிலாக பதில் அளிக்க தொடங்கி விட்டார் முதல்வர் யோகி ஆதித்யநாத். அடுத்த 3 மாதங்களில் அரசு துறைகளில் 3 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு நடவடிக்கையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட சந்திப்பின்போது, பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்து சனிக்கிழமை (இன்று) மாலைக்குள் தகவல் அளிக்க வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த 6 மாதத்துக்குள் 3 லட்சம் பேருக்கு அரசு வேலை… எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த யோகி ஆதித்யநாத்..
வேலை வாய்ப்பு

ஆனால், நேற்று மாலைக்குள் பெரும்பாலான துறைகள் தங்களது துறைகளில் நிரப்பட வேண்டிய காலியிடங்கள் தொடர்பான புள்ளிவிவரத்தை அளித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அரசு துறைகளில் 3 லட்சம் காலியிடங்கள் உள்ளது. காலியாக உள்ள இடங்களுக்கு மிகவும் வெளிப்படை தன்மையுடன் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை நடத்தும்படி அந்த துறைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு 6 மாதத்துக்குள் பணியில் சேருவதற்கான கடிதத்தை வழங்க வேண்டும் எனவும் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.