நவீன வாழ்க்கை முறையில், இயற்கையான தீர்வைத் தேடும் “ஆரா மருத்துவம்”

 

நவீன வாழ்க்கை முறையில், இயற்கையான தீர்வைத் தேடும் “ஆரா மருத்துவம்”

உணவே மருந்து, அதுவே இயற்கையான வாழ்க்கை முறை என நமது முன் தலைமுறையினர் வாழ்ந்து வந்தனர். ஆனால், நவீன வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள வேகமான மாற்றங்கள் நமது உணவு பழக்கத்திலும் பல்வேறு வகையான மாற்றங்களை கொண்டு வந்து விட்டது.

வாழ்க்கை மாற்றத்துக்கு ஏற்ப ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என ருசிக்கு மட்டுமே சாப்பிட தொடங்கி விட்டோம். இந்த உணவுகள் அனைத்தும், ஒரு கட்டத்தில் பக்க விளைவுகளாக உடல்பருமன், சிறுவயதிலேயே சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் என மருந்து, மாத்திரையுடனே வாழ்க்கையை வாழ வேண்டிய நிலைக்கு கொண்டு வந்து விட்டது. போதாதற்கு தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம்.

நவீன வாழ்க்கை முறையில், இயற்கையான தீர்வைத் தேடும் “ஆரா மருத்துவம்”


நோய் எதுவாக இருந்தாலும் அதற்கு உணவு, மருந்து. தனியாக எந்த விதமான மருந்துகளை எடுக்கத் தேவையில்லை என்கிறார் 23 வயதே ஆகும் ஸ்ருதி ஶ்ரீதரன். நம்முடைய வீடுகளில் பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறை தன்னுடைய தொழிலாக மாற்றியுள்ளார் ஸ்ருதி.
ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ள ஸ்ருதி, கவுன்சிலிங் மற்றும் உணவு முறை மாற்றம் மூலம் பல்வேறு நோய்களுக்கு தீர்வளித்து வருகிறார்.

பிரச்சினையுடன் வருபவர்களின் உடலை பரிசோதனை செய்து, அவர்களின் தேவைக்கு ஏற்ப உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை கொடுப்பதே ஸ்ருதி நடத்தும் ஆரா (Auratheholistic) நலவாழ்வு சிகிச்சை முறையாகும். அவர் அளிக்கும் சிகிச்சை முறைகள் என்ன ? அதனுடைய சிறப்பு என்ன என்பது நமக்கு விளக்கினார்.

நவீன வாழ்க்கை முறையில், இயற்கையான தீர்வைத் தேடும் “ஆரா மருத்துவம்”

நோயின் தாக்கத்தினால் ஏற்படும் வலி, சிக்கல் ஆகியவற்றிலிருந்து மக்களை காப்பதே நலவாழ்வு மருத்துவத்தின் நோக்கம். உணவுதான் சிறந்த மருந்து என்பதை உணர்ந்து கொண்டால், மருத்துவமனைக்கு செல்லத் தேவையில்லை. ஆனால், மருத்துவமனை செல்ல வேண்டிய நெருக்கடியில் இருப்பவர்கள், மருந்துகளை மட்டுமே தீர்வாக நினைக்கத் தேவையில்லை.

அதற்கு அன்பு, கரிசனை, அமைதியான மனம், நம்பிக்கை, உடற்பயிற்சிகள், உணவு எல்லாமே சரிவிகிதத்தில் அமைந்தால் நோயின் தாக்கத்தில் இருந்தது விரைவில் விடுபடலாம். எண்ணம்போல வாழ்க்கையை வாழலாம். இதுதான் எங்கள் ஆரா நலவாழ்வின் நோக்கம் .“எங்களிடம் வருபவர்களிடம் முதற்கட்ட மருத்துவ பரிசோதனை நடத்திய பிறகு , ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையுடன் நோயாளிகளுக்கு தேவையான உணவு குறித்து முடிவு செய்வோம்.

நவீன வாழ்க்கை முறையில், இயற்கையான தீர்வைத் தேடும் “ஆரா மருத்துவம்”

குறிப்பாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் எப்படி நோயை குணமாக்குகின்றன என்பது குறித்த கவுன்சிலிங்கையும் நோயாளிகளுக்கு வழங்குவோம். அதாவது உடல்பருமனை குறைக்க முடியாமல் அவதியுறுபவரிடம், ஊட்டசத்து உணவை எப்படி எல்லாம் எடுத்து கொள்ள வேண்டும், அதனால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி புரிய வைப்போம்.

உடல் பருமனையும் குறைக்க வேண்டும், அதே நேரத்தில் நல்ல ருசியான உணவையும் சாப்பிட வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு, நாங்கள் வழங்கும் உணவுகள் எத்தனை பலன் தரக்கூடியது எனச் சொல்வோம். வேகவைத்த காய்கறிகளை தவிர்த்து பச்சை காய்கறிகள், சிறுதானியங்கள் நல்ல பலனை தரக்கூடியது. ஆனால் பலரும் பச்சை காய்கறி என்ற உடனே அதை எப்படி சாப்பிடுவது என கேட்பார்கள்.

நவீன வாழ்க்கை முறையில், இயற்கையான தீர்வைத் தேடும் “ஆரா மருத்துவம்”

ஆனால் நோயாளிகளுக்கு பிடித்த வகையில் அந்த உணவை தயாரித்து தருவதால், விருப்ப உணவாக மாறிவிடுகிறது. சர்க்கரை, தைராய்ட், உடல்பருமன் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்த உணவு முறை நல்ல பயனளிக்கிறது. நோயின் தாக்கம் அதிகம் இருப்பவர்களுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை தவிர்க்க முடியாது. ஆனால், அந்த மருந்துகளில் என்ன சத்து கிடைக்குமோ, அதற்கான உணவை தயாரிப்போம். நாளடைவில், மருந்தைக் குறைத்து உணவிலேயே அதை ஈடு செய்துவிட திட்டமிடுகிறோம்.

அந்த நபரால் நன்கு சாப்பிட முடியும் என்கிற போது அவருக்கு தேவையான ஊட்டசத்து உணவுகளிலேயே அதை ஈடு செய்ய முடியும் என்பதுதான் எங்கள் நலவாழ்வு மருத்துவத்தின் நோக்கம். அதன் மூலமாக நோயின் வீரியத்தை குறைப்பது, உடலுக்கு தேவையான சத்துகளை உருவாக்குவது மற்றும் மருத்தினால் ஏற்பாடும் பக்கவிளைகளை தவிர்ப்பது என ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு ஏற்ப எங்களுடைய அணுகுமுறை இருக்கும்” என்கிறார் ஸ்ருதி.

நவீன வாழ்க்கை முறையில், இயற்கையான தீர்வைத் தேடும் “ஆரா மருத்துவம்”

“ஊட்ட சத்துமிக்க உணவுகள் தேவைப்படுபவர்களுக்கு நாங்களே சமைத்து வழங்குகிறோம், வீட்டில் தாங்களே சமைத்துக் கொள்கிறோம் என்பவர்களுக்கு அதன் தயாரிப்பு முறை உள்ளிட்ட ஆலோசனை வழங்குகிறோம். இந்த மருத்துவ முறையில், மருந்துகளே இல்லை என்றாலும், மருத்துவர்கள் உடன் இருப்பார்கள். மனநலம், உடல்நலம் பரிசோதனைகள் வழக்கம்போல இருக்கும்.

மருத்துவர்கள் ஆலோசனை அளிப்பார்கள். ஆனால், மருந்துகளுக்கு பதிலான உணவை நாங்கள் பரிந்துரை செய்வோம். பயிற்சியை பரிந்துரை செய்வோம். உடன் நம்பிக்கை அளித்து உறுதுணையாக இருப்போம். அதாவது மருத்துவ துறைக்குள் மருந்தில்லா மருத்துவம் என்று சொல்லலாம்” என்றார்.

நவீன வாழ்க்கை முறையில், இயற்கையான தீர்வைத் தேடும் “ஆரா மருத்துவம்”

நவீன வாழ்க்கையில் இயற்கையான வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக் கொள்வது என தேடுபவர்களுக்கு, ஆரா நலவாழ்வு தீர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.