ஈரோட்டில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில், 3-வது நாளாக வருமான வரி சோதனை

ஈரோட்டில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில், 3-வது நாளாக வருமான வரி சோதனை

ஈரோடு

ஈரோட்டில் உள்ள பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில், 3-வது நாளாக வருமான வரி சோதனை

ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனம் மீது வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. இதன் அடிப்படையில், கடந்த 14ஆம் தேதி அன்று ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் உள்ள அந்த கட்டுமான நிறுவன அலுவலகம், கஸ்பாபேட்டையில் உள்ள உரிமையாளர் வீடு மற்றும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான கல்குவாரி, பேருந்து நிறுவனம், மசாலா பொருட்கள் நிறுவனம் உள்ளிட்ட 15 இடங்களில் 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை காரணமாக அந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில், 3-வது நாளாக வருமான வரி சோதனை

மேலும், வெளியாட்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வில்லை. தொடர்ந்து, நேற்று இரண்டாவது நாளாக நீடித்த சோதனையில் அலுவலக கோப்புக்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் கணக்கில் வராத 16 கோடி ரூபாய் பணம் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஈரோட்டில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில், 3-வது நாளாக வருமான வரி சோதனை

இந்த நிலையில், இன்று வருமான வரித்துறையினர் 3-வது நாளாக சோதனையை தொடர்ந்து வருகின்றனர். இதில், கட்டுமான நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.