’20 ஆண்டுகளுக்குப் பிறகு’ சட்டமன்றத்துக்கு செல்லும் பாஜக உறுப்பினர்!

’20 ஆண்டுகளுக்குப் பிறகு’ சட்டமன்றத்துக்கு செல்லும் பாஜக உறுப்பினர்!

அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய 20 இடங்களில் போட்டியிட்டது.

’20 ஆண்டுகளுக்குப் பிறகு’ சட்டமன்றத்துக்கு செல்லும் பாஜக உறுப்பினர்!

இந்த சூழலில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் நெல்லை,நாகர்கோவில், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வந்தது.இதில் எல்.முருகன் திமுக வேட்பாளர் கயல்விழியை விட குறைவான வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்த நிலையில் தாராபுரம் திமுக வசம் வந்துள்ளதாக தெரிகிறது.

’20 ஆண்டுகளுக்குப் பிறகு’ சட்டமன்றத்துக்கு செல்லும் பாஜக உறுப்பினர்!

இந்நிலையில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி 30 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்ற நிலையில் திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜன் பின்னுக்கு தள்ளி வெற்றி வாகை சூடியுள்ளார். இதன் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் உறுப்பினர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் தாமரை மலராது என்பதை அக்கட்சியின் வேட்பாளர் வெற்றியால் பொய்யாக்கியுள்ளார்..