இன்று ராமர் கோயில் பூமி பூஜை…. 28 ஆண்டு கால உண்ணாவிரதத்தை கை விடும் பெண் பக்தை

இன்று ராமர் கோயில் பூமி பூஜை…. 28 ஆண்டு கால உண்ணாவிரதத்தை கை விடும் பெண் பக்தை

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் ஊர்மிளா சதுர்வேதி. 1992ல் அயோத்தியில் பிரச்சினைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்டது அதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் ஊர்மிளா சதுர்வேதிக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை தொடங்கினால் மட்டுமே இனி உணவு சாப்பிடுவது என உறுதிமொழி எடுத்தார்.

இன்று ராமர் கோயில் பூமி பூஜை…. 28 ஆண்டு கால உண்ணாவிரதத்தை கை விடும் பெண் பக்தை

1992 டிசம்பர் 6ம் தேதி முதல் தற்போது வரை கடந்த 28 ஆண்டுகளாக ஊர்மிளா சதுர்வேதி உணவுகளை சாப்பிடவில்லை. தயிர், பழங்கள் மற்றும் பால் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். இன்று ராமர் கோயில் கட்டுமான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்க உள்ளதால் அவர் தனது உண்ணாவிரத்தை கைவிட உள்ளார். அயோத்தியில் பூமி பூஜை முடிந்த பிறகு அங்கு சென்று சரயு நதியில் குளித்து விட்டு தனது உண்ணாவிரதத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார். அவருடன் அவரது குடும்பத்தினரும் அயோத்தி செல்ல உள்ளனர்.

இன்று ராமர் கோயில் பூமி பூஜை…. 28 ஆண்டு கால உண்ணாவிரதத்தை கை விடும் பெண் பக்தை

ஊர்மிளா சதுர்வேதியை மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் டிவிட்டரில் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், ராம் பகவான் தனது பக்தர்களை, அது திரேதா யுகத்தின் தாய் ஷபாரி அல்லது இன்றைய யுகத்தின் தாய் ஊர்மிளாவாக இருந்தாலும் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை, உங்கள் பயபக்தி பாக்கியம். இந்த முழு நாடும் உங்களுக்கு வணக்கம் செலுத்துகிறது! ஜெய் ஸ்ரீராம்! என பதிவு செய்து இருந்தார்.