கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஒருவரை ஒருவர் எதிர்க்கிறார்கள்.. மற்ற இடங்களில் கட்டிப்பிடிக்கிறார்கள்.. பா.ஜ.க.

கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஒருவரை ஒருவர் எதிர்க்கிறார்கள்.. மற்ற இடங்களில் கட்டிப்பிடிக்கிறார்கள்.. பா.ஜ.க.

கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒருவரை ஒருவர் எதிர்க்கிறார்கள் ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் கட்டிப்பிடிக்கிறார்கள் என்று பா.ஜ.க. எம்.பி. தெரிவித்தார்.

கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் ( 514 கிராம பஞ்சாயத்து, 10 மாவட்ட பஞ்சாயத்து, 108 ஒன்றிய பஞ்சாயத்து) வெற்றி பெற்றது. இரண்டாவது இடத்தை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ( 375 கிராம பஞ்சாயத்து, 4 மாவட்ட பஞ்சாயத்து, 44 ஒன்றிய பஞ்சாயத்து) பிடித்தது. சமீபகாலமாக கேரளாவில் எழுச்சி கண்டு வரும் பா.ஜ.க. அந்த தேர்தலில் 23 கிராம பஞ்சாயத்துக்களில் வெற்றி பெற்றது.

கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஒருவரை ஒருவர் எதிர்க்கிறார்கள்.. மற்ற இடங்களில் கட்டிப்பிடிக்கிறார்கள்.. பா.ஜ.க.
கே.ஜே. அல்போன்ஸ்

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி குறித்து அந்த கட்சியின் எம்.பி. கே.ஜே. அல்போன்ஸ் கூறியதாவது: கேரளாவில், கிராம பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, ஒன்றிய பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவற்றில் மொத்தமாக 1,623 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். 50 கிராம பஞ்சாயத்துக்களில் நாங்கள் பெற்ற வாக்குகள் மற்ற கட்சிகளுக்கு சமமாக இருந்தது. நாங்கள் அங்கே அதிகாரத்திற்கு வரக்கூடும்.

கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஒருவரை ஒருவர் எதிர்க்கிறார்கள்.. மற்ற இடங்களில் கட்டிப்பிடிக்கிறார்கள்.. பா.ஜ.க.
காங்கிரஸ்

கேரளாவில் பல இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறப்போகிறது என்பதை அறிந்த காங்கிரஸ் எல்.டி.எப். உடன் கூட்டணி வைத்தது. அவற்றின் சரிவு பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது. அவர்களுக்கு (காங்கிரஸ்) தலைமை மற்றும் சித்தாந்தம் இல்லாததால் இது எதிர்பார்க்கப்பட்டது. கேரளாவில் அவர்கள் கம்யூனிஸ்டுகளை எதிர்க்கிறார்கள். நாட்டின் பிற பகுதிகளில் அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.