நான் டொனால்ட் டிரம்ப் அல்ல.. என் கண்கள் முன்னே மக்கள் பாதிக்கப்படுவதை பார்க்க முடியாது.. உத்தவ் தாக்கரே

நான் டொனால்ட் டிரம்ப் அல்ல.. என் கண்கள் முன்னே மக்கள் பாதிக்கப்படுவதை பார்க்க முடியாது.. உத்தவ் தாக்கரே

சிவ சேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாமனா சார்பாக அதன் எடிட்டரும், சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ரவுத் அண்மையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை பேட்டி எடுத்தார். அது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தற்போது சரத் பவாரை தொடர்ந்து சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சஞ்சய் ரவுத் பேட்டி எடுத்துள்ளார்.

நான் டொனால்ட் டிரம்ப் அல்ல.. என் கண்கள் முன்னே மக்கள் பாதிக்கப்படுவதை பார்க்க முடியாது.. உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரேவுடான நேர்காணல் தொடர்பான டீசரை சஞ்சய் ரவுத் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். டிவிட்டரில், அன்லாக் நேர்காணல்.. நான் டிரம்ப் அல்ல. முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் இதயப்பூர்வமான நேர்காணல்.. சாமனா என்ற தலைப்பில் உத்தவ் தாக்கரே உடனான நேர்காணல் தொடர்பான டீசரை பதிவேற்றம் செய்துள்ளார்.

நான் டொனால்ட் டிரம்ப் அல்ல.. என் கண்கள் முன்னே மக்கள் பாதிக்கப்படுவதை பார்க்க முடியாது.. உத்தவ் தாக்கரே

அந்த டீசரில் சஞ்சய் ரவுத், மும்பை தெருக்களில் வட பாவ் எப்போது மீண்டும் கிடைக்கும் என கேள்வி கேட்கிறார். அதற்கு உத்தவ் தாக்கரே லாக்டவுன் தளர்வு குறித்து குறிப்பிடுகையில் நான் டொனால்ட் டிரம்ப் அல்ல. என் கண்கள் முன்னே மக்கள் பாதிக்கப்படுவதை பார்க்க முடியாது என பேசியுள்ளார். கொரோனா வைரஸை மோசமாக கையாளுகிறார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு உள்ளது. உத்தவ் தாக்கரே பேட்டி சாமனாவில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வெளிவர உள்ளது.