இந்தியாவில் ரூ. 6,500 கோடி முதலீடு – ஃபாக்ஸ்கான் உள்பட 3 நிறுவனங்கள் திட்டம்

இந்தியாவில் ரூ. 6,500 கோடி முதலீடு – ஃபாக்ஸ்கான் உள்பட 3 நிறுவனங்கள் திட்டம்

அடுத்த 5 ஆண்டுகளில் ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள், இந்தியாவில் சுமார் 6,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ரூ. 6,500 கோடி முதலீடு – ஃபாக்ஸ்கான் உள்பட 3 நிறுவனங்கள் திட்டம்

உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரொக்க சலுகை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் உள்நாட்டில் உற்பத்தி பெருகுவதோடு, ஏற்றுமதி அதிகரித்து, வேலைவாய்ப்பும் பெருகும் என்பது மத்திய அரசின் திட்டமாகும். இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்த வரிசையில், ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்த முறையில் செயல்பட்டு வரும் உற்பத்தி நிறுவனங்களான ஃபாக்ஸ்கான், விஸ்டிரான், பெகாடிரான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 6,500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ரூ. 6,500 கோடி முதலீடு – ஃபாக்ஸ்கான் உள்பட 3 நிறுவனங்கள் திட்டம்

இதில் ஃபாக்ஸ்கான் நிறுவனம், 4 ஆயிரம் கோடி முதலீடும், விஸ்டிரான் மற்றும் பெகாடிரான் ஆகிய நிறுவனங்கள் முறையே ரூ.1300 கோடி மற்றும் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்தவே இந்த முதலீட்டில் பெரும்பாலான தொகை செலவிடப்படும் என தெரிகிறது.

இந்தியாவில் ரூ. 6,500 கோடி முதலீடு – ஃபாக்ஸ்கான் உள்பட 3 நிறுவனங்கள் திட்டம்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை விஸ்டிரான் நிறுவனம், இந்தியாவில் தற்போது அசெம்பிள் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்